Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ராமர் பாலம் பட விமர்சனம் (Ram Sethu Movie Review)

படம்: ராமர் பாலம் (Ram Sethu)

நடிப்பு: அக்‌ஷய்குமார், நாசர், நுஷ்ரத் பருச்சா, ஜாக்குலின் ஃபெர்னான்டஸ், சத்யதேவ் கன்சர்னா

தயாரிப்பு: சுபாஷ்கரன், மஹாவீர், ஆஷிஷ் சிங்,  மற்றும் பிர்சிம் வீடியோ

இசை:  அஜய் அதுல்,, விக்ரம் மன்ட்ரோஸ்,  டாக்டர் சீஸஸ் மற்றும் பலர்

தமிழ் வசனம்: வீரேந்திரா.ஆர்.

ஒளிப்பதிவு : அசீம் மிஷ்ரா

இயக்கம்: அபிஷேக் சர்மா

ரிலீஸ்: ஜீ ஸ்டுடியோஸ்

பி ஆர்  ஒ: சுரேஷ் சந்திரா, ரேகா ( D one)

கடவுள் நம்பிக்கை இல்லாதவர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆரியன். இந்நிலையில்  ராமர் பாலத்தை உடைத்து கடலில் கப்பல் போக்குவரத்து நடத்த திட்டமிடுகிறது ஒரு  தனியார் கப்பல் நிறுவனம். அதற்கு அரசும் ஒப்புதல் அளிக்கிறது. ராமர் பாலத்தை இடிக்கக்கூடாது என்று போரட்டம் நடப்பதுடன் பாலத்தை இடிக்க தடை கேட்டு சுப்ரீம் கோர்ட்டில்  பொது நல வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது. ராமர் பாலம் இயற்கையாக. உருவான கல் மண் படிமம் என்று கப்பல் கம்பெனி சார்பில் கோர்ட்டில் வாதம் வைக்கப்படுகிறது. அதை உறுதி செய்யும் வகையில் சில அதிகாரிகள்  தரும்  பிரஷர் காரணமாக ஆர்யன், ராமர் பாலம் தானாக உருவான ஒரு படிமம்”  என அறிக்கை  தருகிறார்.  அதை கோர்ட் ஏற்க மறுக்கிறது.  இதனால்    உறுதியான ஆதாரம் தேடி கடலுக்குள் மூழ்கி ராமர் பாலத்துக்கே சென்று ஆராய்ச்சி யில் ஈடுபடுகிறார்.  ஆனால் அதில் ராமர் பாலம் 7 ஆயிரம்  ஆண்டு களுக்கு முன் ஸ்ரீ ராமர் கட்டியதுதான் என்று ஆரியன் உறுதி செய்கிறார்.  அவரது ஆதாரத்தை கோர்ட்டு ஏற்று  ராமர் பாலத்தை இடிக்க தடை விதிக் கிறது.

ராமர் பாலம் தொடர்பாக ஏற்கனவே நடந்த சர்ச்சைகளின் அடிப்படையில் இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.  ஆர்யன் என்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளராக அக்‌ஷய்குமார் நடித்திருக்கிறார்.

அக்‌ஷய்குமார்  தொடக்க காட்சிகளில் நாத்திகம் பேசும்.போதே இவர் பின்னர் ஆத்திகம் பேசுவார் என்பதை கணிக்க.முடிகிறது.  படத்தின் பெரும்பகுதி கடலுக்கு அடியில் உள்ள ராமர் பாலத்தை பற்ரிய ஆராய்ச்சி காட்சிகளாக அமைக்கப் பட்டிருப்பதால் நீருக்கு அடியில் மூழ்கியிருப்பதுபோன்ற உணர்வு படம் பார்க்கும்போது ஏற்படுகிறது.

இந்தியாவில் செய்யும் ஆராய்ச்சியில் ராமர் பற்றி நிரூபிக்க முடியாத நிலையில் இலங்கைக்கு சென்று  ராவணன் வாழ்ந்த வரலாறை நிரூபிகக போராடும் அக்ஷய்குமார் அசல்  வரலாற்று ஆராய்ச்சியாளராகவே மாறிவிடுகிறார்.

ஜாக்குலின் பெர்னணன்டஸ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின் றனர்.

இயக்குனர் அபிஷேக் சர்மா  என்ன நினைத்து இயக்கினாரோ அதை கச்சிமாக செய்து முடித்திருக் கிறார்.

ஹெலிகாப்டர் சண்டையில் பரபரப்பு  ஏற்படுத்துகின்றனர். ஆனால் ஹெலிகாப்டர்   தரையில் மோதி விழும்  காட்சியில்  பைலட் மட்டும் சாவதும் அக்‌ஷய்குமார் மற்ற  இருவரும் தப்பி நடந்து வருவதும் நம்பமுடியாத காட்சிகள். .

படத்தில் ஒளிப்பதிவாளர்  அசீம் மிஸ்ராவின் பங்கு மிகப்பெரியது.

இசையை பல இசை அமைபாளர்கள்  பகிர்ந்து சிந்தாமல் சிதையாமல் ஒருங்கிணைத்து தந்திருக்கின்றனர்.

ராமர் பாலம் –    ஒரு   புராணம் சரித்திரமாகிறது.

 

 

Related posts

GEAR UP TO #GORAKITA TO THE BEATS OF JAGAME THANDHIRAM’S MUSIC ALBUM

Jai Chandran

கே.‌பாக்யராஜ் வெளியிட்ட ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ பட இசை – முன்னோட்டம்..

Jai Chandran

பிளாக் ஷீப் டிவிக்காக 90ஸ் தொகுப்பாளர்கள்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend