Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: கமல் கட்சி அறிக்கை

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில்  முழு சதியையும் வெளிக் கொணர்ந்து மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்! என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து அக்க்ட்சியின்  துணைத் தலைவர் ஆர்.தங்கவேலுெளியிட்டுள்ள அறிக்கை:

கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருவது மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் பலியானவரின் பின்னணியும், அவருடன் நெருக்கமாக இருந்த வர்கள் குறித்த தகவல்களும் பீதியூட்டும் வகையில் உள்ளன.

இதில் காவல் துறையினரின் விரைவான செயல்பாடுகளும், 5 பேரைக் கைது செய்துள்ளதும் பாராட்டுக்குரியவை. அதேசமயம், முழு சதியையும் கண்டுபிடித்து, சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பின்னணியில் வெளி நாட்டுத் தீவிரவாத கும்பல் இருக் கிறதா என்றும் தீர விசாரிக்க வேண்டும்.

1998-ல் தொடர் குண்டுவெடிப்பால் நிலைகுலைந்த கோவை, அதிலி ருந்து மீண்டுவர பல ஆண்டு களாகின. அமைதியையும், தொழில் நகரின் வளர்ச்சியையும் குலைக்க முயற்சிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். மக்கள் அச்சமின்றி வாழ்வதை உறுதிப் படுத்த தமிழக அரசும், காவல் துறையும் தீவிர நடவடிக்கை எடுப்பது அவசியம்.

இவ்வாறு  ஆர். தங்கவேலு கூறியுள்ளார்.

Related posts

லோகேஷ் இயக்கும் ரஜினி படத்தில் நடிக்கிறேனா? அர்ஜுன் தாஸ் நச் பதில்

Jai Chandran

எக்ஸ்ட்ரீம் (பட விமர்சனம்)

Jai Chandran

மே 2ம் தேதி முழு ஊரடங்கில் ஓட்டு எண்ணிக்கை.. தமிழகத்தில் புது முறை அறிமுகம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend