சத்தியமாக விடவே கூடாது..
ரஜினிகாந்த் ஆவேசம்..
சாத்தான்குளம் தந்தை மகனை போலீஸ் அடித்து கொன்ற சம்பவத்துக்கு ரஜினிகாந்த் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இது பற்றி அவர் தனது
டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில், ‘தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும் பேச்சும் அறிந்து, அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனை வருக்கும் தகுந்த தண்டனை கிடைத்தே ஆக வேண்டும். சத்தியமாக விடவே கூடாது’ என்று தெரிவித்திருக்கிறார்