3 முறை தேசிய விருது வென்ற இந்தி நடன இயக்குனர் சரோஜ் கான் மரணம்..
ஏக் தோ தீன், சோலிக்கே பீச்சே கியா ஹை நடனம் அமைத்தவர்..
பாலிவுட்டில் கடந்த 40 வருடங்களாக பல்வேறு நடிகர், நடிகைகளுக்கு நடனம் அமைத்தவர் சரோஜ்கான். இவர் கடந்த வாரம் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டார். அவருக்கு டாக்டர்கள் கொரோனா பரிசோதனை செய்தனர். அதில் தொற்று இல்லை என தெரிய வந்தது. ஆனாலும் மூச்சுதிணறலுக்கு சிகிச்சை தொடர்ந்து பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந் தார். அவரது உடலை மலட் பகுதியில் குடும்பத்தினர் இன்று தகனம் செய்தனர்.
71 வயதாகும் சரோஜ்கான் 2 ஆயிரம் பாடல்களுக்கு மேல் நடனம் அமைத்தி ருக்கிறார். தேசாப், சிருங்காரம், ஜப் வி மெட் ஆகிய படங்களுக்கு சிறந்த நடன இயக்குனருக்காக 3 முறை தேசிய விருது பெற்றார். அவரது நடன அமைப்பில் மாதுரி தீட்சித் ஆடிய, ’ஏக் தோ தீன்.., மீனாட்சி சேஷாத்திரி ஆடிய சோலிக்கே பீச்சே கியா ஹை போன்ற பல பாடல் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்தன.தேவதாஸ் படத்தி ஆஇஸ்வர்யாராய்க்கும் நடன் அமைத்தார் ச்ரோஜ் கான்
சரோஜ்கான் மறைவுக்கு அமிதாப் பச்சன், அஜய்தேவ்கன், அக்ஷய்குமார், அனில்கபூர், நடிகைகள் மாதுரிதீட்சித், மனிஷா கொய்ராலா,ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், ஜெனிலியா என ஏராளமான நடத்திரங் கள் இரங்கல் தெரிவித்ததுடன் அவரது சேவையை பாராட்டி புகழ் மாலை சூட்டி உள்ளனர்.