சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்த பாட்ஷா படம் திரைக்கு வந்தபோது அதன் வெர்றி விழாவில் தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று பேசினார். அது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடும்கோபத்தை ஏற்படுத்தியது. அதன்பிறகு ஜெயலலிதா ரஜினிகாந்த் இடையே மோதல் நிகழ்ந்து வந்தது. அப்போதே ரஜினியை அரசியலுக்கு வரவேண்டும் என்று ரசிகர்கள் அழைத்து வந்தனர். அதற்கு பதில் அளிக்காமல மவுனம் காத்து வந்தாலும் அவ்வப்போது அரசியலில் வாய்ஸ் கொடுத்து வந்தார் ரஜினி.
திமுக தலைவர் கலைஞர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இரண்டு ஆண்டுக்கு முன் இதுகுறித்து ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்த் நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன். தனிக் கட்சி தொடங்கி சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியிலும் போட்டியிடுவேன் என்று அறிவித்தார், அதன்பிறகு இரண்டு வருடம் கட்சி தொடங்கவில்லை. ஆனால் அதற்கான ஏற்பாடுகள் செய்து வந்தார். அனைத்து மாவட்டங்களுக்கும் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களை நியமித்தார்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் தனிக் கட்சி தொடங்கி ஆட்சியை பிடித்து நேர்மையான நாணயமான ஆட்சியை வழங்குவேன் என்று இன்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
ரஜினிகாந்த் சமீபத்தில் தனது ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனை நடத்தினார். பிறகு பேட்டி அளித்த அவர் அரசியல் பற்றிய தனது நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்பேன் என்றார். இந்நிலையில் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் ஜனவரியில் கட்சித் துவக்கம் டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு என்று குறிப்பிட்டிருப்பதுடன்
மாத்துவோம் எல்லாத்தையும் மத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்லன்னா எப்பவும் இல்ல என்ற ஹேஷ்டேக் பதிவிட்டதுடன் வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடையா பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழ்கத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற. ஜாதி, மதம் சார்பற்ற ஆன்மீக் அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்.. அதிசயம்.. நிகழும்!!! என தெரிவித்திருக்கிறார்,
ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்குவதுபற்றி வெளியிட்டுள்ள அறிவிப்பு அரசியல் வட்டாரங்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது