சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதம் தனிக் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். அவருக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நன்றி தெரிவித்து மெசேஜ் வெளியிட்டிருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
நன்றி தலைவா! உங்களின் அறிவிப்பை கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நாளுக்காக காத்திருந்த லட்சக் கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். உங்களின் எண்ண மெல்லாம் நிஜமாக ராகவேந்திரரிடம் பிரார்த்திக்கிறேன். இந்த கடினமான கொரோனா காலகட்டத்திலும் உங்கள் உடல்நிலையை பொருட்படுத்தாமல் மக்களுக்கு சேவை செய்ய வந்திருக்கிறீர்கள். உங்கள் கனவு நனவாகும்.
இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்திருக்கிறார்.