Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

’கபாலி’ இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் சார்பட்டா பரம்பரை

ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா படங்களை இயக்கியவர்   பா.ரஞ்சித். அவரது இயக்கத்தில் அடுத்து உருவாகும் படத்திற்கு ’சார்பட்டா பரம்பரை’ என்று பெயரிடப் பட்டிருக்கிறது.

இப்படத்துக்கு ஆர்யா தனது உடற்கட்டை கட்டுமஸ்த்தாக்கி பாக்ஸிங் வீரர்போல் தோற்றதை உருவக்கி இருக்கிறார்.
கே 9 ஸ்டுடியோஸ் (K9 Studios) மற்றும் “நீலம் புரடொக்‌ ஷன்ஸ்” இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். வடசென்னை பகுதி யில் வசிக்கும் மக்களின் வாழ் வியலுக்குள் பிரிக்க முடியாத விளையாட்டாக இருக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து முழுக்க முழுக்க அனல் பறக்கும் ஆக்சன் திரைப்படமாக உருவாக்கு கிறார் இயக்குநர் பா.இரஞ்சித்.
இந்த திரைப்படத்திற்காக ஆர்யா மட்டுமல்லாமல், அவரோடு நடித்திருக்கும் நடிகர்கள் ஜான் கோகேன், கலையரசன், சந்தோஷ் பிரதாப், சபீர் ஆகியோரும் இப்படத்திற்காக கட்டு மஸ்த்தான உடற்கட்டோடு நடித்திருக்கிறார்கள்.
கதாநாயகியாக துஷாரா நடிக்கி றார், நடிகர் பசுபதி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்க ளோடு ஜான் விஜய், காளி வெங்கட், அனுபமா ஆகியோ ரும் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக் கிறார். பாடல்கள் கபிலன், அறிவு. முரளி ஒளிப்பதிவு மேற்கொண்டிருக்கிறார். கலை இயக்குநர் த.ராமலிங்கம் இப்படத்திற்காக பிரம்மாண் டமான செட்டுகளை அமைத் திருக்கிறார். செல்வா ஆர்.கே எடிட்டிங் செய்திருக்கிறார். இயக்குநர் பா.இரஞ்சித்துடன் இணைந்து இப்படத்தின் திரைக்கதை, வசனத்தை எழுதி யிருக்கிறார் எழுத்தாளர் தமிழ்ப்பிரபா.
படத்தின் முக்கிய பலமே சண்டைக்காட்சிகள் தான் என்பதால் தேசிய விருது பெற்ற இரட்டையர்கள் அன்பறிவ் சண்டைக்காட்சி களை வடிவமைத்திருக் கிறார்கள்.
படப்படிப்பு ஆரம்பித்த நாளி லிருந்தே மிகுந்த எதிர்பார்ப் பை ஏற்படுத்தி இருந்த இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகி சமூக வலைதளங்களில் பாராட்டுக்களை குவித்து வருகிறது. இறுதிகட்டப் பணிகள் பரபரப்பாக நடந்து வரும் வேளையில், மார்ச் இறுதியில் வெளியாகும் என்று தெரிகிறது.

Related posts

Arun Vijay shares son Arnav Vijay’s fun experience

Jai Chandran

இயக்குனர் கே.பாக்யராஜ், இனியாவுக்கு விருது

Jai Chandran

விஜயகாந்த்தை சந்தித்து வாழ்த்து பெற்ற உதயநிதிஸ்டாலின்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend