Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பட தயாரிப்பாளர் ராஜா திருமணத்தில் ராதாரவி, வீரப்பன் மகள்

தனது திருமணத்தில் ஆதரவற்ற குழந்தைகள் முதியவர்கள் மற்றும் நலிந்த கலைஞர்களை கௌரவித்த மாவீரன் பிள்ளை பட தயாரிப்பாளர் கே என்  ஆர். ராஜா..

இவர் வீரப்பனின் மகள் விஜயலட்சுமி நடிக்கும் மாவீரன் பிள்ளை திரைப் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் ஆவார்.
இவருக்கும் தர்மபுரி அருகே நகதாசன் பட்டி யை சேர்ந்த அனுஷா விர்க்கும் இன்று காலை நகதாசன் பட்டியில் திருமணம் நடைபெற்றது..

இந்த திருமணத்தில் உறவினர்களைவிட ஆதரவற்ற குழந்தைகளும், முதியவர் களும், காதுகேளாதோர், ஊனமுற்றோர் மற்றும் பெரியவர்களும் அதிகளவில் இருந்தனர். அதே போல் நலிவடைந்த தெருக்ககூத்து கலைஞர்களும் அதிகமாக இருந்தனர்.

இவர்கள் அனைவரையும் புதுமாப் பிள்ளை ராஜா வாகனம் வைத்து அழைத்து வந்து உணவளித்து, அவர்களுக்கு புதிய ஆடைகள் கொடுத்து மகிழ்ந்தார்.

இந்த திருமணத்தில் நடிகர் ராதாரவி மற்றும் வீரப்பன் மகள் விஜயலட்சுமி கலந்துகொண்டார்கள். இவர்கள் அனைவரும் ஆதற்றவர்களுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

திருமணவிழாவில் உறவினர்கள், நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை உபசரிப்பது வழக்கம். ஆனால், ஆதரவற்றவர்களை அழைத்து திருமணத்தில் கலந்துகொள்ள செய்தது வியப்பாகவும், வரவேற்க கூடியதாகவும் இருக்கிறது. இந்த புதுமண தம்பதியினரை அப்பகுதி மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
புதிய ஒரு பந்தத்தை தொடங்குகப் போகும் முன், பல்வேறு தரப்பு மக்களின் வாழ்த்தை ஒரு சேர பெற்ற இத்தம்பதியி னை நினைத்து உறவினர்கள் அனைவரும் பூரிப்பில் உள்ளனர்…

இதனைப்பற்றி கே என் . ஆர்.   ராஜாவிடம் கேட்டபோது;
அனைவரும் தன் குடும்ப விசேஷம் என்றாலும் பிறந்தநாள் என்றாலும் ஆசிரமத்திற்கு உள்ளே அவர்களுக்கு உணவு கொடுத்து வெளி உலகம் தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்கள்..

நான் அவர்களை என் உறவுகளை போல பாவித்து என் உறவுகளுக்கு ஆடை எடுத்துக் கொடுத்தது போல் இவர்களுக்கும் ஆடை எடுத்துக் கொடுத்து அவர்களுக்கு உணவு பரிமாறி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன் இது மிகவும் சந்தோஷமாக இருந்தது என்றார்

Related posts

Adipurush Final Trailer unveiled at Tirupati

Jai Chandran

Vishal31 Resumed shoot in Hyderabad

Jai Chandran

ரசிகர் மன்ற நிர்வாகி திருமண விழாவில் சூர்யா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend