தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம். வெளியிட்டுள்ள செய்தியில் நடிகர் சங்கத்தில் வெற்றிபெற்ற நாசர், விஷால், கார்த்தி, பூச்சிமுருகன் உள்ளிட்டோருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். வாழ்த்து செய்தியில் கூறியதாவது:
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தலைவர் என்.இராமசாமியும் நிர்வாகிகளும் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர், ‘அதில் ” தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற்றது. இன்று
நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தலைவராக நாசர், துணைத்தலைவர்களாக பூச்சி முருகன், கருணாஸ், செயலாளராக விஷால் , பொருளாளராக கார்த்தி ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.மீண்டும் நிர்வாகிகளாக நடிகர் சங்கத்தில் பொறுப்பேற்க இருக்கும் நிர்வாகிகளுக்கும், வெற்றிவாகை குடிய அனைத்து செயற்குழு உறுப்பினர்களுக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.