Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிரபாஸ் புதிய படம் தி ராஜா சாப்

*ரெபல் ஸ்டார்’ பிரபாஸ் – இயக்குநர் மாருதி கூட்டணியில் தயாராகும் பெரிதும் எதிர்பார்க் கப்பட்ட பான் இந்திய ரொமான்டிக் ஹாரர் என்டர் டெய்னர் படமான ‘தி ராஜா சாப்’ ( The Raja Saab) எனும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.

பான் இந்திய ரெபல் ஸ்டார் பிரபாஸ்- இயக்குநர் மாருதியுடன் இணைந்து மீண்டும் பார்வையா ளர்களை வசீகரிக்க தயாராகி வருகிறார். பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் சார்பில் தயாராகும் காதல் + திகில் கலந்த திரைப்படத்திற்கு ‘தி ராஜா சாப்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த திரைப்படத்தின் டிஜிட்டல் கட்டவுட் ரெபல் ஸ்டார் பிரபாஸின் சொந்த ஊரான பீமாவரத்தில் பிரம்மாண்டமாக வெளியிடப் பட்டது. விவேக் குச்சிபோட்லா இணை தயாரிப்பாளராக பணியாற்றும் இந்த திரைப்படத் தை தயாரிப்பாளர் டி. ஜி. விஸ்வ பிரசாத் தயாரிக்கிறார். ‘தி ராஜா சாப்’ முழுமையான பொழுது போக்கு அம்சம் உள்ள திரைப்பட மாக இருக்கும் என உறுதியளிக் கிறது. பிரபாஸை மாஸான தோற்றத்தில் காட்சிப்படுத்தி இருக்கும் இந்த பான் இந்திய திரைப்படத்தில் பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழி களில் இந்த திரைப்படம் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது.

‘ரெபல் ஸ்டார்’ பிரபாஸ் இதுவரை ஏற்றிருக்காத ரொமாண்டிக் ஹாரர் ஜானரில் இப்படம் தயாராவதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பும், ஆர்வமும் அனைத்து தரப்பினரி டமும் ஏற்பட்டிருக்கிறது. மேலும் ‘தி ராஜா சாப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வண்ணமயமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் பிரபாஸ் லுங்கியை அணிந்து விண்டேஜ் தோற்றத்தில் அசத்தியிருக்கிறார். ஜாலியான மற்றும் ரொமாண்டிக்கான கேரக்டர் லுக்கில் பிரபாஸை பார்த் ததும்.., ரசிகர்களுக்கும் திரையுல கினருக்கும் புதுவிதமான உணர்வை அளித்திருக்கிறது.

‘தி ராஜா சாப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஒரு வண்ணமய மான திரைப்படத்தை காணவிருக் கிறோம் என்ற உணர்வை ஏற்படுத் தியிருக்கிறார் இயக்குநர் மாருதி. இவரது இயக்கத்தில் ‘பலே பலே மகடிவோய்’, ‘பிரதி ரோஜுபந்தகே’ போன்ற வெற்றி பெற்ற குடும்பம் பொழுது போக்கு படங்களை இயக்கியிருக்கிறார். மேலும் தெலுங்கு திரையுலகில் வெளி யான முதல் காதலும் திகிலும் கலந்த திரைப்படமான ‘பிரேம கதா சித்திரம்’ எனும் வெற்றி படத்தை யும், காதலும், நகைச்சுவையும் கலந்த ‘மகானுபாவுடு’ போன்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தையும் இயக்கியவர். இவரது இயக்கத்தில் தயாராகும் காதலும், திகலும் கலந்த பொழுதுபோக்கு திரைப் படமாக உருவாகும் ‘ தி ராஜா சாப்’ படத்தில் ரெபல் ஸ்டார் பிரபாஸுடன் இணைவதால் பரவசத்துடன் கூடிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

‘கார்த்திகேயா 2’ மற்றும் ‘தமாக்கா’ ஆகிய சூப்பர் ஹிட் கமர்சியல் திரைப்படங்கள் மூலம் பிரபலமான தெலுங்கு திரையுலக முன்னணி தயாரிப்பாளர் டி. ஜி. விஸ்வ பிரசாத் இப்படத்தினை தயாரிக்கி றார். அவரது பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் சார்பில் உயர்தர தயாரிப்பு தரத்துடன் சமரசம் இல்லாமல் பிரம்மாண்ட மான பட்ஜெட்டில் ‘ தி ராஜா சாப்’ படம் தயாராகிறது.

கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தேசிய விருது பெற்ற இசைய மைப்பாளர் எஸ். தமன் இசைய மைக்கிறார். படத்தொகுப்பு பணி களை கோத்தகிரி வெங்கடேஸ் வரா கவனிக்க, வி எஃப் எக்ஸ் பணிகளை ‘மகதீரா’, ‘பாகுபலி’ போன்ற படங்களில் பணியாற்றிய கமல் கண்ணன் தலைமையிலான குழுவினர் மேற்கொள்கிறார்கள். இயக்குநர் மாருதி எழுதி, இயக்கும் ‘ தி ராஜா சாப்’ திரைப்படம் மொழி களின் எல்லைகளைக் கடந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என எதிர்பார்க்கப்படு கிறது.

Related posts

ஐ.ஏ.எஸ்களின் பணி விதி திருத்தம் முடிவு மத்திய அரசு கைவிடம மநீம கோரிக்கை

Jai Chandran

Nesippaya will be a visual treat – Vishnuvardhan

Jai Chandran

Withdraw “Agnipath” Project – kamal Haasan

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend