⁹படம்: ஹனு மான்
நடிப்பு: தேஜா சஜ்ஜா, அம்ரிதா அய்யர், வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், ராஜ் தீபக் ஷெட்டி, வெண்ணிலா கிஷோர், சமுத்திரக்கனி
தயாரிப்பு: நிரஞ்சன் ரெட்டி
இசை: அனுதீப் தேவ் , கெளர ஹரி, கிருஷ்ணா சௌரவ்
ஒளிப்பதிவு: தாசரதி சிவேந்திரன்
இயக்கம்: பிரசாந்த் வர்மா
பி ஆர் ஒ: யுவராஜ்
அஞ்சனாத்திரி கிராமத்தில் திருடர்கள் பயம் என்பதால் அந்த ஊர் பயில்வான் ஊர் மக்களிடம் வரி வசூல் செய்து ஊர் மக்களை காப்பாற்றுவதாக கூறிக் கொள் கிறார். அவர் அடாவடித்தனமாக மக்களை அடித்து துன்புறுத்தி பணத்தை பறிக்கிறார் பணம் தராதவர்களை குஸ்திக்கு வரச் சொல்லி அவர்களை அடித்து நொறுக்கி முடமாக்குகிறார். அதே கிராமத்தில் தனது அக்காவுடன் (வரலட்சுமி) வாழ்ந்து வருகிறான் அனுமந்த். ( தேஜா சஜ்ஜா ) . அந்த கிராமத்துக்கு வருகிறாள் மீனாட்சி (அம்ரிதா அய்யர்) . அவரை கண்டதும் காதல் கொள்கிறான் அனுமந்த். அவன் செய்யும் கோமாளித்தனங்களை பார்த்து அவனை கண்டுகொள்ளாமல் இருக்கிறாள் மீனாட்சி. ஆனால் ஊர் மக்களை துன்புறுத்தும் பயில்வனை தட்டிக் கேட்கிறாள்.. காட்டுப்பகுதிக்கு செல்லும் மீனாட்சியை திருடர்கள் துரத்து கின்றனர். அப்போது அங்கு வரும் அனுமந்த் அவளுக்கே தெரியாமல் அவளை காப்பாற்றுகிறான். தன்னை காப்பாற்றியது அனுமந்துதான் என்பது அவளுக்கு சரியாக தெரியவில்லை இந்நிலையில் திருடர்கள் அனுமந்தை அடித்து கத்தியால் குத்தி தூக்கி வீசுகின்.றனர். அங்கு இருக்கும் அருவி நீரில் விழும் அனுமந்த் அடி ஆழத்துக்கு செல்லும்போது அங்கு ஆஞ்சநேயரின் ரத்தத்தால் உருவான ஒரு கூழாங்கல் அனுமந்த் கையில் கிடைக்க அதை எடுத்துக் கொண்டு ஊர் திரும்புகிறான். அதிலிருந்து பிறக்கும் சக்தி அனுமந்துக்கு சூப்பர் சக்தியாக கிடைக்கிறது. அந்த சக்தியை பயன்படுத்தி ஊர் மக்களை மிரட்டும் பயில்வானை அனுமந்த் அடித்து துவம்சம் செய்து தூக்கி வீசுகிறான் . அனுமந்திடம் இருக்கும் சூப்பர் சக்தியை கேள்விப்பட்ட மைக்கேல் ( வினய்) அதை பறிக்க அந்த கிராமத்துக்கு தனது அடியாட்களுடன் வந்து இறங்குகிறான். ஊர் மக்களிடம் நல்ல விதமாக பேசி அவர்களுக்கு நன்மை செய்வதாக கூறி அங்கே தங்குகிறான். அந்த வாய்ப்பை பயன்படுத்தி அனுமந்துக்கு எப்படி சக்தி வருகிறது என்பதை கண்டறிந்து அவனிடம் இருக்கும் சக்தி கல்லை பறிக்க வில்லத்த னங்களை ஏவி விடுகிறான். அவனது திட்டம் பலித்ததா? அனுமந்த் கதி என்னவானது என்ற கேள்விகளுக்கு ஆன்மீக வாசனை யுடன் அனு மான் படம் பதிலளிக்கிறது
கிராமத்துக்குள் வேலை வெட்டி இல்லாமல் நண்பனுடன் ஊர் சுற்றும் தேஜா சஜா தன் குடும்பத் தின் மீது எந்த அக்கறையும் இல்லாமல் இருக்கிறான். அந்த ஊருக்கு புதிதாக வரும் அம்ரிதா ஐயரை கண்டதும் காதல் கொண்டு அவர் பினனாலேயே சுற்றும் தேஜா அவரை கவர்வதற்காக சேட்டைகள் செய்வது கலகலப்பு. அவர் செய்யும் சேட்டைகளுக்கு அமிர்த என்ற பதிலும் சொல்லவில்லை. ஆனால் அங்கு இருக்கும் ஒரு குரங்கு தேஜாவின் நடவடிக்கை களை கிண்டல் கேலி செய்து கமெண்ட் அடிப்பது கலகலப்பு.
தேஜா சஜ்ஜாவுக்கு எப்போது சக்தி வரும் அவர் எப்போது ஊர் மக்களை துன்புறுத்தும் பயில்வானை தாக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு சீனுக்கு சீன் அதிகரித்துக் கொண்டிருக்க ஒரு கட்டத்தில் அருவி தண்ணீரில் மூழ்கி ஆஞ்சநேயரின் ரத்தத்தால் சக்தி பெற்ற கூழாங்கல்லை எடுத்து வந்ததும் இனி ஆக்சன் அதுகளம் தான் என்று எண்ண தோன்றுகிறது
பயில்வானின் வில்லத்தனத்தை தட்டி கேட்கும் அமிர்தா ஐயரை பார்த்து, “நீ என்னுடன் சண்டைக்கு வா ” என்று பயில்வான் அழைப்பது பரபரப்பு .அந்த களத்தில் இறங்கப் போவது தேஜா தான் என்பது தெரிந்தாலும் அவர் எப்போது கோதாவில் இறங்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகிறது
களத்தில் இறங்கும் தேஜா பயில்வானை அந்தர் செய்வதுடன் அவனை அந்தரத்தில் தூக்கி நிறுத்தி எலும்புகளை உடைத்து நொறுக்கி கீழே வீசுவது கைத்தட்டல் பெறுகிறது. பிறகு வரும் குட்டி குட்டி பயில்வான்க ளையும் எதிர்கொண்டு அடித்து வீசுவது குழந்தைகளை ஆரவாரம் செய்ய வைக்கிறது. இந்த குட்டிக்கதை முடிந்த பிறகு பெரிய கதை ஆரம்பமாகிறது
சிறு வயது முதலே சூப்பர் மேன் ஆக வேண்டும் என்று திட்டம் போடும் வில்லன் வினை ராய் தேஜா சஜ்ஜாவுக்கு கிடைத்த சக்தியை பறிக்க கிராமத்துக்கு வந்ததும் படத்தின் சீன்கள் பிரமாண்டத்தை நோக்கி நகர்கிறது.
ஊர் மக்களுக்கு மருத்துவமனை கட்டி தருவதாக கூறி ஏமாற்றி தேஜா சஜ்ஜாவிடம் சூப்பர் சக்தி எப்படி வருகிறது என்பதை கண்ட றிந்து அதை பறிக்கும் செயலில் ஈடுபடுவது விறுவிறுப்பை கூட்டுகிறது.
தேஜா சஜா மெல்லிய தேகத்துடன் இருந்தாலும் ஆஞ்சநேயர் சக்தி கிடைத்ததும் அவரது உடல் மொழியில் மாற்றம் செய்து கோபத்தை வெளிப்படுத்தி ஆக்ஷன் காட்சிகளில் இறங்குவது நம்பும்படி உள்ளது
தேஜாவின் அக்காவாக வரும் வரலட்சுமி சரத்குமார் தன் தம்பி மீது பாசத்தை பொழிந்து அவனுக் காகவே திருமணம் கூட செய்து கொள்ளாமல் வாழ்கிறார் என்ற செண்டிமெண்ட் பெண்களின் மனதை டச் செய்யும்.
சமுத்திரக்கனி ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கி றார். அவர்தான் தேஜா சஜ்ஜா வுக்கு அவ்வப்போது உதவிகள் செய்து அவரிடமிருந்து சக்தி பறிபோகாமல் காக்கிறார்.
ஹனுமான் சமூக படம் இது ஆன்மீக படமல்ல என்று படக் குழு ரிலீஸுக்கு முன்பு கூறி வந்தனர். ஆனால் அது முழுக்க முழுக்க ஒரு ஆன்மீக படமாகவே உருவாகி இருக்கிறது.
ஜெய் ஆஞ்சநேயா. என்ற சொல்லும் கூட்டத்திற்கு பலம் சேர்க்கும் ஒரு படமாகவே அனுமான் வந்திருக்கிறது.
பிரம்மாண்ட ஆஞ்சநேயர் சிலை, ஐஸ் கட்டிக்குள் ஆஞ்சநேயர் அமர்ந்திருக்கும் காட்சி போன்ற வி எப் எக்ஸ , ஸ்பெஷல். பெக்ட்ஸ் கிராபிக்ஸ் காட்சிகள் படத்தை பிரம்மாண்டத்துடன் தூக்கி நிறுத்துகிறது. அதற்கு ஏற்ப இயக்குனர் பிரசாந்த் வர்மா. திரைக்கதை அமைத்திருப்பது பெரும் பலம்
அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நடக்கும் நிலையில் அனுமான் படம் திரைக்கு வந்திருப்பதும் ஒரு அரசியலோ என்று என்ன தோன்று கிறது. ஆனால் படத்தில் எந்த அரசியலும் இல்லை . . ஐஸ் கட்டியை உடைத்துக்கொண்டு தவத்தில் இருக்கும் ஆஞ்சநேயர் விண்ணில் பறக்கும் காட்சி மிரட்டல்.
நிரஞ்சன் ரெட்டி படத்தை தயாரித் திருக்கிறார்.
தாசரதி சிவேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்
அனுதீப் தேவ் கெளர ஹரி, கிருஷ்ணா சௌரவ் ஆகியோர் இசையமைத்திருக்கின்றனர்.
அனுமான் படத்தில் ஆர்ட் டைரக்டருக்கு கொஞ்சம் வேலை என்றால் கிராபிக்ஸ், வி எஃப் எக்ஸ் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் போன்ற தொழில் நுட்ப கலைஞர்களுத் தான் 90 சதவீதம் வேலை தரப்பட்டிருக்கிறது அத்தனையும் நேர்த்தியாக செய்யப்பட்டிருந் தாலும் அதில் செயற்கை தனம் மித மிஞ்சி இருக்கிறது. பிரம்மாண்ட ஆஞ்சநேயர் சிலை மனதை கவர்ந்தாலும் அதை வி எப் எக்ஸ் காட்சியாக இல்லாமல் ஒரு பிரம்மாண்ட சிலையை அமைத்தி ருந்தால் படத்துக்கு கூடுதல் பிளஸ் ஆக இருந்திருக்கும்.
ஹனுமான் , தேர்தல் நேரத்தில் வந்திருக்கும் ஆன்மீக படம்.
.