கேரளாவில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி பினராய் விஜாயன் தலைமை யில் நடந்து வந்தது. அங்கு ஆட்சி காலம் முடிவடைவதை யொட்டி
கேரளாவின் 140 தொகுதி களுக்கும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.
ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய ஜனநாயக கூட்டணி மற்றும் பாஜக என மும்முனை போட்டி நடந்தது.
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில் ஆரம்பத்திலிருந்தே இடதுசாரி கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.
94 இடங்களில் இடதுசாரி கூட்டணியும், 45 இடங்களில் காங்கிரஸ் கூட்டணியும் , மற்றவை 1 இடங்களிலும் முன்னிலை பெற்றிருக்கிறது. பாஜக எந்த தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை.
71 இடங்கள் வெற்றிபெற்றால் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில் இடதுசாரி கூட்டணி 94 இடங்களில் முன்னிலை பெற்றிருப்பதால கேரளாவில் மீண்டும் பினராய் விஜயன் தலைமையில் இடதுசாரி கூட்டணி ஆட்சியமைக்க உள்ளது.