Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நகர் புற உள்ளாட்சி தேர்தல் முடிவு: கட்சி தலைவர்கள் கருத்து

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில்  தமிழக முதல்வரும் தி முக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று  பேட்டியளித்தார்.  அவர் கூறும்போது,’ “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றிருக்கும் தி.மு.க.வின ருக்கு எனது வாழ்த்துகள். அதேவேளை எனது பணிவான, உரிமை கலந்த வேண்டுகோள் என்னவென்றால், இந்த வெற்றியை ஆடம்பரமாக அல்லாமல் அமைதியாக கொண்டாட வேண்டும்” என்றார்.
—நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த ஒன்றுதான். இதன்மூலம் ஆளும்கட்சி செயற்கையான வெற்றியை பெற்று இருக்கிறது. இந்தத் தேர்தல் நூறு விழுக்காடு சுதந்திரமாகவும், நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற்றிருந்தால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மகத்தான வெற்றியை பெற்றிருக்கும். ஆனால் அவ்வாறு நடைபெற வில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. நடந்து முடிந்த தேர்தல் என்பது முழுமையான மக்கள் எண்ணத்தின் பிரதிபலிப்பு அல்ல.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் பொன்மொழிக்கேற்ப மக்களின் தீர்ப்பிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலை வணங்குகிறது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அதன் தோழமை கட்சிகளுக்கும் வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு இந்தத் தருணத்தில் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இதற்கு முன்புகூட பல தோல்விகளை சந்தித்தாலும், அவற்றில் இருந்து மீண்டு வந்து மகத்தான வெற்றிகளை படைத்து இருக்கிறது.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மமே மறுபடியும் வெல்லும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் மக்களின் உண்மையான மன நிலையையும், விருப்பத்தையும் வெளிப்படுத்துவதற்கான ஜனநாயக ரீதியான வாய்ப்பு விரைவில் அமையும். அந்த நன்னாள் வரும்போது மக்கள் சக்தி வெல்லும், மக்களின் விருப்பப்படி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் வெற்றி பெறும். இது நிச்சயம் நடக்கும்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகள் எந்தவிதமான தொய்வும் இன்றி எப்போதும் போல் கழகப் பணியை மேற்கொள்ள வேண்டுமென்றும், மக்கள் தொண்டு ஆற்ற வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கூறியதாவது:
 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று வெளிவந்துள்ளன.  பா.ஜ.க. மிக பெரிய ஒரு வெற்றியை பெற்றுள்ளது.  இதற்கு முன்பு வெற்றி பெறாத இடங்களில் கூட பா.ஜ.க. தடம் பதித்துள்ளது.

Related posts

தீபாவளிக்கு நயன்தாராவின் மூக்குத்தி அம்மன்.. டிஸ்னி ஹாட் ஸ்டார் அறிவிப்பு

Jai Chandran

Lydian Nadhaswaram’s new global attempt

Jai Chandran

சிரஞ்சீவிக்கு அமெரிக்காவில் பாராட்டு விழா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend