Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

21 மாநகராட்சிகளையும் கைப்பற்றி மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக இமாலய சாதனை

தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம்  நகராட்சி மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் நடந்தன. அதாவது 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு  தேர்தல் நடந்தது.  இதில் மொத்தம் 12 ஆயிரத்து 838 தொகுதிகளுக்கு 57 ஆயிரத்து 778 பேர் தேர்தலில் போட்டியிட்டனர்.

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கோவிட் பரவல் தடுக்கும் நோக்குடன் நேரடியாக தொகுதி களுக்கு சென்று வாக்கு சேகரிக்காமல் காணொலி மூலம் மக்களிடம் வாக்கு சேகரித்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் தற்போதைய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக தொகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்தனர். அதேபோல் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் நேரடியாக  பிரசாரம் செய்தார். பல்வேறு கட்சியினரின் தீவிர பிரசாரங்களுக்கு பிறகு கடந்த  19ம் தேதி வாக்கு பதிவு நடந்தது.

இதில்  ஒட்டுமொத்தமாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. மாநகராட்சிகளில் 52.22 சதவீதம், நகராட்சிகளில் 68.22 சதவீதம், பேரூராட்சிகளில் 74.68 சதவீதம் வாக்குகள் பதிவானது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்கு பதிவு  எந்திரங்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 268 வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அந்த மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு மற்றும் உள், வெளி பகுதியிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டது. துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் இருந்தனர்

22ம் தேதி அதாவது இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இரவு 9 மணி அளவில்  பெரும்பாலான வார்டுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தி.மு.க. தனித்து 153 வார்டுகளில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. 15 இடங்களை கைப்பற்றியது. தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் 13 இடங்களில் வெற்றி பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  4 இடங்களையும், சி.பி.ஐ., பா.ஜனதா தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றன.
விடுதலை சிறுத்தைகள் 4 இடங்களிலும், ம.தி.மு.க. 2 இடங்களிலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா ஒரு இடங்களிலும், சுயேட்சை 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
தமிழகத்தில் ஒட்டு மொத்தமாக 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது.  138 நகராட்சிகளில் 130  நகராட்சிகளை கைப்பற்றும் வகையில் தி.மு.க. வெற்றி வாய்ப்புடன் உள்ளது. அ.தி.மு.க. 6 நகராட்சிகளில் மட்டுமே முன்னிலை பெற்று இருந்தது.
489 பேரூராட்சிகளில் 405 பேரூராட்சிகளின் முன்னிலை நிலவரம் வெளியானது. அதில் தி.மு.க. கூட்டணி 389 பேரூராட்சிகளை கைப்பற்றும் வகையில் முன்னிலை பெற்று சாதனை படைத்துள்ளது.
அ.தி.மு.க.வுக்கு 20 பேரூராட்சிகளில் மட்டுமே வெற்றி பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பா.ஜனதா-3, பா.ம.க-3, நாம் தமிழர் ஒரு இடத்தில் வெற்றி வாய்ப்புடன் உள்ளது.
மொத்தத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 90 சதவீத வெற்றிகளை ஈன்று தமிழக மக்களின் ஆதரவை தக்க வைத்துக்கொண்டுள்ளது. குறிப்பாக மாநகராட்சியில் மட்டுமின்றி நகராட்சி, பேரூராட்சிகளிலும் அதிக வார்டுகளை தி.மு.க. கூட்டணி கைப்பற்றி மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது,  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக விஸ்வரூபம் எடுத்து சாதனை படைத்திருக்கிறது என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இம்முறை காங்கிரஸ் 3வது பெரிய கட்சியாக உருவெடுத்திருக்கிறது,.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஒரு இடமும் பெறவில்லை.
மொத்த பதவியிடங்கள் 869/1374 3561/3843 7596/7621
போட்டி இன்றி தேர்வு 4 18 196
போட்டி தேர்வு 865 3543 7400
வேட்பு மனு தாக்கல் இன்மை 0 0 1
தேர்தல் தள்ளி வைப்பு 1 1 4
தேர்தல் ரத்து 0 0 12
தி.மு.க 613 2189 4384
அ தி மு க            109 598 1206
காங்கிரஸ் 48 140 367
சி.பி.ஐ 5 19 26
சி.பி.ஐ(எம்) 17 38 101
தே.மு.தி.க 0 10 23
பி ஜே பி 8 49 229
மற்றவை 69 515 1258
மொத்தம் 870 3562 7613
தேர்தலில் முழுமுடிவுகள் நாளை மதியம் வாக்கில் தெரியவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

புலம்பெயர் ஈழத் தமிழர் சார்பாக பேமலிமேன் 2 படத்துக்கு கண்டனம்..

Jai Chandran

ATHARVAA RECALLS HIS EXPERIENCE in ANTHOLOGY ‘NAVARASA’

Jai Chandran

டாக்டர் வே.சரவணன் வழங்கும் படம் ‘செவிலியர் கடவுள்’.

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend