பாடலாசிரியர் பிறைசூடன் (65) நேற்று மாலை காலமானார்.இவர் எழுதிய என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரு என்னடி.., ”
சோலப்பசுங்கிளியே..”
“மீனம்மா..மீனம்மா..”,
“நூறு வருஷம் இந்தமாப் பிள்ளையும், பொண்ணும் தான்” ” ஆட்டமா..தேரோட்டமா..”,
“சிlnலுசிலுக்கும் மணியோசை..”.
“வெத்தலைப் போட்டேன் ஷோக்குல..”
“சந்திரரே..சூரியரே..நட்சத்திர நாயகரே..”.
” இதயமே..இதயமே..உன் மெளனம் என்னைக் கொல்லுதே..”,
உள்ளிட்ட பல நூறு எழுதியவர் பிறைசூடன்.தி
திரைப்படாடலாசிரியரும், கவிஞருமான பிறை சூடனுக்கு வயது 65. திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 1956 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி பிறந்தவர் பிறைசூடன். 1985-ல் வெளியான ‘சிறை’ படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வ நாதன் இசையமைத்த ‘ராசாத்தி ரோசாப்பூ’ என்னும் பாடலை எழுதியதன் மூலமாக தமிழ்த்திரையுலகில் பாடலாசிரியராக தனது பயணத்தை தொடங்கி னார்.
தமிழில் இதுவரை 400-க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் 1,400 பாடல் களை இவர் எழுதியுள் ளார். பணக்காரன் திரைப்படத்தில் இவர் எழுதிய ‘நூறு வருஷம் இந்த மாப்பிளையும் பொண்ணுந்தான்’, செம்பருத்தி திரைப்படத்தில் ‘நடந்தால் இரண்டடி’ உள்ளிட்ட பாடல்கள் மிகவும் பிரபலமானவை. திரைப் பட பாடல்கள் மட்டுமல் லாது தனிப்பாடல்கள், கவிதைகள் உள்ளிட்டவற் றையும் எழுதியுள்ள பிறைசூடன், தற்போது வரை தனது எழுத்துப் பணியை தொடர்ந்து வந்துள்ளார்.ச
சமீபத்தில்ஆஸ்கார் விருதுக்கு இந்திய படங்களை பரிந்து ரைக்கும் குழுவில் அவர் இடம்பெற்ற செய்தியும் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் நேற்று அக்டோபர் 8ம் தேதி மாலை சுமார் 4.15 மணியளவில் தனது குடும்பத்த்னருடன் பேசிக்கொண்டிருந்த போது, பிறைசூடன் காலமானார். அவரது மறைவு செய்தி வெளியானதை யடுத்து திரையுலகத்தினர் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.