படம்: கருமேகங்கள் கலைகின்றன
நடிப்பு: பாரதிராஜா, கவுதம் மேனன் எஸ். ஏ. சந்திரசேகர், ஆர்.வி. உதயகுமார், தங்கர்பச்சான், யோகிபாபு, அதிதி பாலன், சாரல், பிரமிட் நடராஜன், மஹானா சஞ்சீவ், விபின்லால், நிஜந்தன்,
தயாரிப்பு: துரை வீராசாமி
இசை: ஜி. வி. பிரகாஷ்குமார்
ஒளிப்பதிவு: ஏகாம்பரம்
இயக்கம்: தங்கர்பச்சான்
பி ஆர் ஒ: ஜான்சன்
ஓய்வு பெற்ற ஜட்ஜ் ராமநாதன் (பாரதிராஜா) தன் மகன் கிரிமினல் வக்கீல் கோமகனுடன் (கவுதம் மேனன்) ஒரே வீட்டில் இருந்தாலும் 10 வருடமாக பேசாமல் இருக்கி றார். அதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. இந்நிலையில் 13 வருடத் துக்கு முன் தன் பெயருக்கு வந்த கடிதம் ராமநாதனிடம் கிடைக்கி றது. அதைக்கண்டதும் அதிர்ச்சி அடையயும் ராமநாதன் திடீரென்று வீட்டிலிருந்து வெளியேறி கடிதம் எழுதிய பெண்ணை தேடி செல்கி றார். யாரை தேடி செல்கிறார். கடிதம் எழுதியவரை கண்டு பிடித் தாரா? தந்தை மகன் பேசினார் களா? இதற்கிடையில் ஆதரவற் றோர் இல்லத்தில் இருக்கும் மகளை காண வரும் வீரமணி (யோகிபாபு) தன் மகளை ( சாரல்) பார்த்தாரா? என்ற பல கேள்வி களுக்கு மனதை நெகிழ வைக்கும் உருக்கமான பதில் அளிக்கிறது படம்.
84 வயதில் இயக்குனர் பாரதி ராஜா தான் ஒரு பிறவி நடிகன் என்பதை நிரூபித்திருக்கிறார். ஜட்ஜ் ராமநாதன் பாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.10. வருடமாக தன்னுடன் பேசாமலி ருக்கும் மகன் கவுதம் மேனன் தந்தையின் பிறந்த நாளை கொண்டாட ஏற்பாடு செய்து அவரிடம் சென்று புதிய கோட்டை அணிந்து கொள்ளச் சொல்வதற் காக அப்பா என்று அழைப்பததும் மகன் குரலை கேட்டு ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் நிறைந்த உணர்வுடன் அவரை பாரதிராஜா பார்ப்பதும் அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார் இயக்குனர் தங்கர் பச்சான்
13 வருடத்துக்கு பிறகு வரும் கடிதத்தை பார்த்து அதிர்ச்சி அடையும் பாரதிராஜா தன் பழைய காதலி மற்றும் மகளை தேடி ராமேஸ்வரத்திற்கு செல்வதும் அங்கு வீதிவீதியாக திரிந்து மகளையும், பழைய காதலி யையும் தேடும்போது. . இத்தனை வருடம் அவர்களை கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்று மனதில்.இருக்கும் குற்ற உணர்வு மேலிட தளர்ந்த நடை.போட்டு போகும்போது மனதை பிழிந்தெடுக்கிறார்.
மகள் அதிதியை சந்தித்து தனது தவறை சொல்லி அவரது காலில் விழுந்து பாரதிராஜா மன்னிப்பு கேட்டு கெஞ்சுவதும் அதை ஏற்காமல் அதிதி துரத்தி அடிப் பதும் அரங்கை அமைதிக்கட லாக்குகிறது.
தந்தை பாரதிராஜாவுடன் வீணாக சண்டைபோட்டு விட்டோமே என்று வேதனை அடையும் மகன் கவுதம் மேனன் கண்ணீர் விடும்போது இது காக்க காக்க படத்தை இயக்கிய ஸ்டைல் இயக்குனர் கவுதம் மேனனா அல்லது குணசித்திர நடிகரா என சந்தேகத்தை ஏற்படுத்துகிறார்.
தான் பெறாவிட்டாலும் மகளாக வளர்த்த சிறுமி சாரல். மீது யோகி பாபு காட்டும் அன்பும் பாசமும் தன்னை காமெடியனாக காட்டி மற்ற படங்களில் வீணடிக்கி றார்கள் என்பதை உணர்த்து கிறார்.
அருவி படத்தில் நடித்த அதிதி பாலன் கண்மணி என்றவொரு துணிச்சல் பாத்திரத்தில் நடித்தி ருக்கிறார். பாரதிராஜா தன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டும் மனம் இரங்காமல் திட்டி விரட்டும்போது ஏற்ற பாத்திரத்தின் கனத்தை கொட்டி தீர்க்கிறார் அதிதி.
அறிமுக பேபி நட்சத்திரம் சாரல் வயதுக்கேற்ற வார்ப்பு. யோகிபாபு மீது பாசம் காட்டி முத்தமழை பொழிவதும், அவருடன் போனில்.பேச வேண்டும் என்று வார்டனுக்கு பயந்து மறைந்து நின்று போன செய்வதுமாக நிஜ பாசத்தின் வெளிப்பாட்டை பிரதிபலிக்கிறார்.
எஸ் ஏ.சந்திரசேகர், ஆர். வி. உதயகுமார், தங்கர் பச்சான், பிரமிட் நடராஜன், மஹானா சஞ்சீவ், விபின்லால், நிஜந்தன் என எந்த பாத்திரமும் வீணில்லை.
துரை வீராசாமி தயாரித்திருக் கிறார்.
கவிப் பேரரசு வைரமுத்துவின் ஜீவனுள்ள பாடல் வரிகளுக்கு கூடுதல் ஆயுள் கொடுத்திருக் கிறார் இசை அமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவாளர் ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு சினிமாத்தனமில்லாத எதார்த்த வடிவத்தை கண்ணில் பதியச் செய்கிறது.
வாழ்க்கையை முழுமையான தொகுப்புடன் மனதில்.படர விடுகிறார் எடிட்டர் லெனின்.
இயக்குனர் தங்கர்பச்சான் நெறியாள்கை எப்போதுமே மனித வாழ்க்கையின் அர்த்தமுள்ள தருணங்களை பதிய வைப்பது போல் கருமேங்கள். கலக்கின்றன படத்தையும்.இதய அறைக ளுக்குள்.முழுவதுமாக நிரப்பி இருக்கிறார்.
கருமேகங்கள் கலைகின்றன – மனசாட்சியின் கண்ணாடி.