Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பரமசிவன் பாத்திமா ( பட விமர்சனம்)

படம்: பரமசிவன் பாத்திமா

நடிப்பு: விமல், சாயா தேவி, எம் எஸ் பாஸ்கர், இசக்கி கார்வண்ணன், எம்.சுகுமார், அருள்தாஸ், ஶ்ரீ ரஞ்சனி, மனோஜ்குமார், ஆதிரா, சேஷ்விதா, வி. ஆர்.விமல்ராஜ், மகேந்திரன், காதல் சுகுமார், ஆருபாலா, வீரசமர், களவாணி கலை

தயாரிப்பு: இசக்கி கார்வண்ணன்

இசை: தீபன் சக்ரவர்த்தி

ஒளிப்பதிவு: எம் சுகுமார்

இயக்கம்: இசக்கி கண்ணன்

பி ஆர் ஒ: நிகில் முருகன்

மதமாற்றம் நிகழும் சம்பவம் அந்த பகுதியில் ஜரூராக நடக்கிறது. இதனால் அடிக்கடி இரு சமூகத்தினருக்கிடையே மோதல் வெடிக்கிறது. இந்த சம்பவத்தால் மர்மான கொலை சம்பவம் நடக்கிறது. அதுபற்றி விசாரிக்க அப்பகுதியில் போலீஸ் முகாமிடுகிறது. பலத்த காவல் இருந்தபோதும் மீண்டும் கொலை சம்பவம் தொடர்கிறது. ஒரு கட்டத்தில் இந்த கொலைகள்.இரண்டு ஆத்மாக்கள் செய்வது தெரிகிறது. அது ஏன் என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

இந்துக்கள் கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றப்படுவது குறித்து கதை விவாதிக்கிறது. இந்தளவுக்கு வெளிப்படையாக எந்த படத்திலும் மதமாற்றம் பற்றியும், மதமோதல் குறித்தும் பேசியதில்லை, மீடியாக்கள், பத்திரிகைகளில் கூட இப்படி விவாதிக்க அனுமதி கிடையாது. ஆனால் மதமாற்றம், மதமோதல் பற்றி இந்த திரைப்படத்தில் பகிரங்கமாக விவாதிக்க தணிக்கை குழு எப்படி அனுமதி கொடுத்தது என்பது பெரிய வியப்பு. அதேபோன்ற காட்சிகளை இயக்குனர் எந்த வெட்டும் இல்லாமல் வெளிக் கொண்டு வந்திருப்பது அவரது புத்திசாலித்தனம் என்றும் சொல்லலாம்.

பழி வாங்கும் ஆத்மாக்களாக விமல், சாயாதேவி நடித்திருக்கின்றனர். இப்படிப்பட்ட ஆத்மாக்களை சினிமாவில் முதன்முறையாக பார்க்க முடிகிறது. சமையல் செய்கிறது, காய் கறி வாங்கி வருகிறது. இதுபோன்ற காட்சியெல்லாம் கொஞ்சம் காமெடியாகவே தெரிகிறது.

மதமாற்றம் செய்ய வரும் எம்.எஸ். பாஸ்கரை விமல் நேரடியாக விரட்டுவதும் மத மோதலை தூண்டும் விதமாக உள்ளது. ஒரு கட்டத்தில் பாதிரியார் எம்.எஸ் . பாஸ்கர் இந்துவாக மாறியதுபோல் குங்குமம் வைத்து ஆசி செய்வதெல் லாம் மத நல்லிணக்கமா? மதமாற்ற அறிகுறியா என்பது புரியவில்லை. ஒரு வழியாக எல்லா சாமியும்.ஒன்று  என்று மெசேஜ் சொல்கிறார் இயக்குனர் இசக்கி கார்வண்ணன்.

தீபன் சக்ரவர்த்தி இசை அமைத்திருக்கிறார். ராஜா சாயலில் இசை என்பதைவிட அதே இசையை போட்டிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
.எம்.சுகுமார் கேமரா ஆத்மா, பேய் படம் என்றாலும் பயமுறுத்தாதது ஆறுதல்.

பரமசிவன் பாத்திமா – மதமாற்ற தோலுரிப்பு.

Two And A Half Star Rating Illustration Vector

 

Related posts

The Village That Made Me Say Yes – Devi Sri Prashath..

Jai Chandran

மழை வெள்ளம்: மக்களை இன்று சந்திக்கும் கமல்

Jai Chandran

Nesippaya will be a visual treat – Vishnuvardhan

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend