கொரோனா வைரஸ் 2வது அலை இந்தியாவை அச்சத்துக் குள்ளாக்கி இருக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளி களுக்கு பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு நோயாளிகள் மரணம் அடைந்து வருகின்றனர். இந்திய தலைநகர் டெல்லியில் இந்த் நிலைமை மிக மோசம் அடைந்துள்ளது. ஆக்ஸிஜன் உற்பத்தியை பெருக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந் தாலும் தட்டுப்பாடு தீர்ந்தபா டில்லை.டெல்லியில் நோயாளிகள் அபாய சூழலில் இருப்பதுபற்றி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அனைத்து மாநில முதல்வர் களுக்கும் உருக்கமான கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:
தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க உதவி செய்ய வேண்டும். ஆக்சிஜன் இருப்பு அதிக அளவில் இருந்தால் டெல்லிக்கு அனுப்பி உதவுங் கள்’ எனக் குறிப்பிட்டிருக்கி றார்.
மத்திய அரசு எங்களுக்கு உதவுகிறது. என்றாலும் கொரோனாவின் தீவிரத் தன்மை காரணமாக, கிடைக் கக்கூடிய அனைத்து வளங் களும் போதுமானதாக இல்லை என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் கெஜ்ஜிரி வால்.
இதற்கிடையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக டெல்லியில் உள்ள ஜெய்ப்பூர் கோல்டன் ஆஸ்பத்திரியில் நள்ளிரவில் 25 நோயாளிகள் பலியாகி உள்ளனர்.