Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

ஒ டி டி யில் சிறுபடங்கள் பிஸ்னஸ்..

ஒ டி டி யில் சிறுபடங்கள் பிஸ்னஸ்..

முரளி ராமநாராயணன் யோசனை..

புதிய படங்கள் ஓ டி டி பிளாட்பார்மில் வெளியிடும்போது சிறு பட்ஜெட் படங்களையும் சேர்த்து வாங்க வேண்டும் என்று யோசனை தெரிவித்திருக்கபட்டுள்ளது. இதுகுறித்த பல்வேறு வெற்றிப்படங்களை தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் தயாரிப்பாளர் என் ராமசாமி என்கிற முரளி ராமநாராய ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

தமிழ் திரைப்படங்களை டிஜிட்டலில் வெளியிடும் முறைக்கு தயாரிப்பாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. கொரோனாவின் கோரதாண்டவத்தில் உலகமே சிக்கி தவிக்கை யில் திரையரங்குகள் மூடிக் கிடக்கும் இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்து படத்தை தயாரித்து அதை விளம்பரம் செய்ய முடியா மல் தவிக்கும்போது ஓடி டி பிளாட்பாரம் என்பது காலத் தின் கட்டாயம் ஆகிறது. பெரிய படங்களுக்கு திரை யரங்குகள் எப்படி அதிகமாக கிடைக்கிறதோ அதேபோல் ஒ டி டியில் வெளியிட பெரிய படங்களை மட்டும்தான் விற்க முடிகிறது.
சிறு முதலீட்டு படங்களுக்கு திரையரங்குகள் கிடைப் பதில்லை. டிஜிட்டல் மார்க்கெட்டிலும் அவுட்ரேட் முறையில் விற்க முடிவதில் லை. இந்த நிலை மாற வேண்டும்
நம் சங்க உறுப்பினர்களுக் காக பேச வேண்டியவர்கள் தங்கள் பதவியை வைத்து தன், தன்னைச் சார்ந்த வர்களுடைய பெரிய, சிறிய, மிகச்சிறிய என எல்லா படங்களையும் அவுட் ரேட்டாக விற்பது வாடிக்கை ஆகிவிட்டது. ஆனால் ஏதாவது பிரச்சினை என்றால் அவர்களுக்கு அவர்களைச் சார்ந்தவர் களுக்கும் உதவி செய்ய, குரல் கொடுக்க சிறு பட தயாரிப்பாளர்கள் தேவைப் படுகிறது. அப்படிப்பட்ட வர்கள் இவர்கள் படங்களை விற்கிறபோது கூடவே ஐந்து சிறு பட தயாரிப்பாளரின் படங்களையும் விற்றுத் தர ஏற்பாடு செய்திருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில் லை. இது என்ன நியாயம்? இதற்கு என்னதான் முடிவு?

ஒரு சிலர் ஒன்றாக சேர்ந்து தன்னிச்சையாக முடிவு எடுத்து வெளியிடும் அறிக்கை பல தயாரிப்பாளர் களுக்கும் சாதகமாக அமைய வேண்டுமே தவிர சிறு பட தயாரிப்பாளர் களுக்கு எந்தவித பாதிப்பை யும் ஏற்படுத்தி விடக்கூடாது. ஆகவே அனைத்து தயாரிப் பாளர்களையும் கலந்து பேசி நாம் ஒரே குரலாக ஒலித்து இருக்க வேண்டும். அவசர கதியில் சிறு பட தயாரிப்பா ளர்கள் பெரிய பட தயாரிப் பாளர்கள் என அனைவரது கருத்தையும் கேட்காமல் ஒரு சிலரது தனிப்பட்ட கருத்துக் களை அனைத்து தயாரிப்பா ளரின் கருத்தாக ஒலிப்பது தவறு. இப்போது எடுக்கப் படும் முடிவு என்பது இனி வரும் காலங்களில் சிறிய படங்களை விற்பனை செய் வது என்பது சுலபமானதாக மாற வேண்டும். இந்த ஓடி டி வியாபாரத்தை முறைப் படுத்தி வியாபார முறைக்கு கொண்டு வர வேண்டும். அதாவது எந்த ஒரு நிறு வனம் டிஜிட்டல் வெளியீட் டிற்காக பெரிய பட்ஜெட் படம் ஒன்றை வாங்குகிறதோ அந்த நிறுவனம் ஐந்து சிறு முதலீட்டு படங்களை கண்டிப் பாக வாங்க வேண்டும். அதனை அந்த பெரிய படத் தை விற்கும் தயாரிப்பாளர் உறுதி செய்ய வேண்டும். என்று ஒரு வரைமுறையை கொண்டுவர வேண்டும். அதற்கு பெரிய தயாரிப்பா ளர்கள் ஒத்துழைக்க வேண்டும். இதனை நம் சங்கத்தின் மூலம் நடை முறைப்படுத்த கேட்டுக் கொள்ள வேண்டும்.
இதற்கு தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளித்தால் வருடத்திற்கு 25 பெரிய படங்கள் வியாபாரமா னால் 125 சிறிய படங்கள் சிரமமில்லாமல் வியாபாரம் ஆகும். இது இப்போது மட்டுமில்லாமல் வருங்காலத் திலும் சிறிய படங்களை வியாபார ரீதியாக வெற்றி பெறச் செய்ய வழிவகுக்கும் எந்த ஒரு பிரச்னையிலும் பெரிய பட தயாரிப்பாள ருக்கு மட்டுமே போராடும் நாம், சிறு பட தயாரிப்பாளர் களையும் கருத்தில் கொண்டு அவர்களும் நன்மை அடைய கூடிய முடிவுகளை மட்டுமே எடுக்க வேண்டும். பெரிய, சிறிய என்ற பாகுபாடுபாராமல் டிஜிட்டல் பிளாட்பாரத்தில் வியாபாரத்தை கவனிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை உணர வேண்டிய தருணம். நீங்களும் வாழுங்கள் சிறு பட தயாரிப்பாளர்களையும் வாழ விடுங்கள். இந்த நேரத்தில் திரையரங்கு உரிமையாளர்களும் தயாரிப்பாளர்களின் சுமை யை கருத்தில் கொண்டு தயாரிப்பாளர்களும் திரை யரங்க உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் ஒன்றுகூடிப் பேசி ஒரு சுமூக மான வியாபார சூழ்நிலை யை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும். மேலும் தயாரிப் பாளர்களின் நீண்டநாள் கோரிக்கைகளில் ஒன்றான கம்ப்யூட்டரைஸ்டு டிக்கெட் முறையை அனைத்து திரை யரங்குகளிலும் அறிமுகப் படுத்தி வியாபாரத்தின் வெளிப்படைத்தன்மையை திரையரங்கு உரிமையாளர் கள் முடிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு முரளி ராம நாராயணன் கூறியுள்ளார்.

#ott movie business new statement from murali

Related posts

‘YUDDHA KAANDAM ’ Internationally Recognised and Winning Awards

Jai Chandran

Actress Amala Paul joins Ajay Devgn’s Bholaa

Jai Chandran

விக்னேஷ் சிவனின் “லவ் பண்ணா உட்றனும்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend