படம்: ஒண்டி முனியும் நல்லபாடனும்
நடிப்பு: பரோட்டா முருகேசன், கார்த்திகேசன், சித்ரா, முருகன், சேதுபதி, விஜயன், விகடன்
தயாரிப்பு:கே கருப்புசாமி
இசை: என் டி ஆர்
ஒளிப்பதிவு: விமல்
இயக்கம்: சுகவனம்
பிஆர்ஓ: நிகில் முருகன்
கிராமத்தில் சக சிறுவர்களுடன் விளையாடும் சிறுவன் வேலன் (விஜயன்) கிணற்றில் தவறி விழுகிறான். அவனை மீட்கும்போது மூச்சு பேசில்லாமிருக்கிறான். அவனது தந்தை “மகனை மீட்டுக்கொடு ஆடு பலியிடுகிறேன் ” என்று ஒண்டிமுனியிடம் நேர்ந்து கொள்கிறார். சிறுவன் உயிர் பிழைக்கிறான். வேண்டுதல் நிறைவேற்ற முடியாதபடி ஊர் பெரும்புள்ளிகளான இரண்டு பண்ணாடிகள் (பண்ணையார்கள்)கோயிலை திறக்காமல் சண்டையால் பிரிந்து நிற்கின்றனர். அவர்களை சமாதானம் செய்து கோயிலை திறந்து வேண்டுதலை நிறைவேற்ற எண்ணுகிறார் நல்லபாடன் இதற்கிடையில் பல்வேறு பிரச்னைகள் எழுகிறது
இறுதியில் நடப்பது என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.
கோவை மாவட்ட பகுதி கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையாக வைத்து இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். ஒண்டிமுனி என்பது சாமி. நல்லமாடன் என்பது அந்த கிராமத்தில் ஒடு க்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த நபர்.
வெண்ணிலா கபடி குழு படத்தில் சூரிக்கு பரோட்டா போட்டி
வைப்பாரே அந்த சர்வர்தான் பரோட்டா முருகேசன்.
மனுஷன் நல்லபாடன் வேடத்தில் அப்படியே மூழ்கிப்போயிருக்கிறார்.
கோயிலை திறக்க வைக்க பண்ணாடிகளை சந்தித்து முறையிட நடையாய் நடக்கும் முருகேசன் படம் பார்ப்பவர்களை நெகிழ வைக்கிறார்..
கோயிலுக்கு நேர்ந்துவிட்ட கிடா அடிக்கடி தொலைந்து போய் மீண்டும் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற ஒரு பரபரப்பு காட்சியை சற்று வேகமாக நகர்த்துகிறது.
நல்லபாடன் மகனாக வரும் விஜயன் நண்பர்களுடன் சுற்றுகிறார், ஒரு பெண்ணை சைட் அடிக்கிறார் பின்னர் நண்பர்களே விஜயனை “ஏண்டா எங்க வீட்டுப் பெண்ணை சைட் அடிக்கிற” என்று உதைத்து அனுப்புகிறார்கள். சைட் அடிக்கும்போது உசுப்பி விடும் நண்பர்கள் பிறகு ஏன் உதைக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை.
பெரிய பண்ணாடியாக கார்த்திகேசன், சின்ன பண்ணாடியாக முருகன் நடித்திருக்கின்றனர்.
கே கருப்புசாமி தயாரித்திருக்கிறார்
என் டி ஆர் பின்னணி இசை அமைத்திருக்கிறார்.
காட்சிக்கு ஏற்ற ஒளிப்பதிவை விமல் செய்திருக்கிறார்.
இயக்குனர் சுகவனம் சிறுவயதில் இருந்து தனது ஊரில் பார்த்த சம்பவங்களை தொகுத்து நிஜத்துக்கு பக்கமாக படத்தை இயக்கியிருக்கிறார்.
நடித்திருக்கும் நடிகர்களும் அந்தந்த பாத்திரங்களாக வாழ்ந்திருப்பதால் பக்கத்திலிருந்து அவர்களது வாழ்வியலை பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
ஒண்டி முனியும் நல்ல பாடனும் – மனிதர்களின் நிறங்கள்.

Review By
K.Jayachandhiran
Trendingcinemasnow.com
