Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இன்ஸ்டா இன்ஸ்டாகிராம் ஆல்பம் கிருத்திகா உதயநிதி வெளியிட அரவிந்த்சாமி பெற்றார்

முதலியார் பிரதர்ஸ் பிலிம் (Mudaliar Brother’s Film ) தயாரிப்பில், உலகின் முன்னணி இசை நிறுவனமானசோனி மியூசிக்   (Sony Music) நிறுவனம் வழங்கும், நக்‌ஷா சரண் குரல் மற்றும் நடிப்பில், சாண்டி மாஸ்டர் நடன அமைப்பில், லியோ இசையில், கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆல்பம் பாடல் “இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்.

நவீன தலைமுறையின் இணைய உலகின் பரபரப்பை அவர்களின் உலகை சொல்லும் டிரெண்டிங் பாடலாக இப்பாடல் உருவாகியுள்ளது. இப்பாடல் வெளியீட்டு விழா இன்று ஆல்பம் குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் தயாரிப்பாளர் மதுசரண் பேசியதாவது;

எங்களை வாழ்த்த வந்துள்ள நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி. எம் 3 .முதலியார் பிரதர்ஸ் பிலிம் (M3 Mudaliyar Brother’s Film) உடைய முதல் தயாரிப்பு. எங்கள் மகளுக்காக இதனை ஆரம்பிக்கவில்லை, நல்ல தயாரிப்பு களை உருவாக்க வேண்டுமென ஆரம்பித் துள்ளேன், நல்ல புராஜக்ட்களை பார்த்து கொண்டிருக்கிறோம். விரைவில் நல்ல படைப்புகளை தயாரிப்போம், ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் கார்த்திக் பேசியதாவது:

இப்பாடல் முழுக்க முழுக்க சாண்டி மாஸ்டர் ஐடியா தான் அவர் ஐடியாவை தான் நான் எடுத்தேன் அவ்வளவு தான், உங்களுக்கு பாடல் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி.

இசையமைப்பாளர் லியோ பேசியதாவது:

இந்த குழு என்னை அழைத்த போது, இன்றைய தலைமுறைக்கு ஏற்றவாறு எல்லோரும் பாடும்படியாக, எல்லோருக்கும் பிடிக்கும் படியான டியூனாக இந்த பாடல் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். சாண்டி மாஸ்டர்,  எம் 3 முதலியார் பிரதர்ஸ் பிலிம் ஆகியோரால் இப்பாடல் அடுத்த லெவலுக்கு சென்றுள்ளது. நக்‌ஷா இப்பாடல் மூலம் ராக்ஸ்டாராக மாறியுள்ளார். இன்னும் பெரிய அளவுக்கு செல்வார் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

சாண்டி மாஸ்டர் பேசியதாவது:

இங்கு வந்து வாழ்த்தும் அனைவருக்கும் நன்றி. ஆல்பம் பாடல் விழாவில், உண்மையில் டான்ஸ் மாஸ்டரை யாரும் விருந்தினராக அழைக்க மாட்டார்கள், ஆனால் என்னை இங்கு அழைத்துள்ள மது ஷாலினி மேடமுக்கு நன்றி. நக்‌ஷாவுக்கு சுத்தமாக டான்ஸ் வரவில்லை, உண்மைதான். ஆனால் அவர் பேஸிக்கிலிருந்து ஒரே மாதத்தில் கற்றுக்கொண்டு, இந்த அளவு ஆடியிருக்கிறார். முதலில் பாடல் பாடிய வாய்ஸ் யாருடையது என்பது எனக்கு தெரியாது ஆனால் நக்‌ஷா வாய்ஸ் தான் என தெரிந்து ஆச்சர்யப்பட்டேன். நக்‌ஷா கண்டிப்பாக பெரிய அளவு வெற்றி பெறுவார். இந்த பாடல் உங்களுக்கு பிடித்துள்ளது என நம்புகிறேன் நன்றி.

டாக்டர் கமலா செல்வராஜ் பேசியதாவது:

மது ஷாலினி அழைத்து தான் வந்தேன், அவர் குடும்ப நண்பர் இந்தபாடல் பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நக்‌ஷா அவரது பெற்றோருக்கு நல்ல பெயர் வாங்கி தந்துள்ளார். அவர் மேலும் பல உயரங்களுக்கு செல்ல வாழ்த்துக்கள் நன்றி.

இயக்குனர்  கிருத்திகா உதயநிதி பேசியதாவது:

நான் ஏற்கனவே இரண்டு ஆல்பம் பாடல் செய்துள்ளேன் எனக்கு அதில் உள்ள கஷ்டங்கள் தெரியும், இந்த பாடல் மிக துள்ளலாக இருந்தது. இயக்குநர் நன்றாக இயக்கியுள்ளார். சாண்டியின் முந்தைய போதை பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றி

நடிகர் அரவிந்த் சாமி பேசியதாவது.:

குடும்ப நண்பராக தான் நான் வந்துள்ளேன். இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது எல்லோரும் மிக நன்றாக செய்துள்ளார்கள். அனைவரும் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

பாடகர், நடிகை நக்‌ஷா பேசியதாவது:

என் பெற்றோருக்கு தான் முதலில் நன்றி சொல்லி ஆரம்பிக்க வேண்டும் என் கனவை அவர்கள் நனவாக்கியுள் ளார்கள். இப்பாடலை வெளியிடுவதற் காக மியூசிக் சோனி நிறுவனத்திற்கு நன்றி. சாண்டி மாஸ்டர் நிறைய சொல்லி தந்தார், அண்ணா உங்கள் அன்புக்கு நன்றி. கார்த்திக் மிக அழகாக இப்பாடலை எடுத்துள்ளார். இங்கு வந்து என்னை வாழ்த்தி ஆதரவு தந்த கிருத்திகா உதயநிதி மேடம், அரவிந்த் சாமி சார், கமலா மேடமுக்கு நன்றி. உங்கள் எல்லோருக்கும் இப்பாடல் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி.

இவ்வாறு அவர்கள் பேசினார்கள்..

அனைவரையும் பி ஆர் ஒ நிகில் முருகன் வரவேற்றார்.

இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்  பாடல்  ஆல்பம் தொழில் நுட்ப குழுவினர்: விவரம் வருமாறு:

இயக்கம் கார்த்திக். ஒளிப்பதிவு  ஹரீஷ் கண்ணன். கிரியேட்டிவ் டைரக்டர் & நடன அமைப்பு சாண்டி இசை & பாடல்  லியோ.
படத்தொகுப்பு ஜிஞ்சி மாதவன்
டிஐ அருண் சங்கமேஸ்வர்
கலை இயக்கம் தினேஷ்
பாடகர் நக்‌ஷா சரண்
உடை வடிவமைப்பு ஶ்ரீதேவ கோபாலகிருஷ்ணன்
சிகை & மேக்கப்  யாமினி
தயாரிப்பு முதலியார் பிரதர்ஸ் பிலிம்

**

Related posts

கொரோனா தொற்று அதிகரிப்பால் அனைத்து மாநில முதல்வர்களுடன் மோடி ஆலோசனை: மீண்டும் லாக்டவுன்?

Jai Chandran

SonyLIV’s next Thittam Irandu On July 30th

Jai Chandran

வி ஸ்கொயர் விநியோகிக்கும் அமலா பால் படம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend