Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

நூறு சாமி ( பட விமர்சனம்)

படம்: நூறு சாமி

நடிப்பு: விஜய் ஆண்டனி, சுவாசிகா, அஜய் திஷான், லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், சக்தி, காவ்யா அனில், பாலாஜி சக்திவேல், அருள் தாஸ், மூர்த்தி, ஜென்சன் திவாகர்
தயாரிப்பு: பாத்திமா விஜய் ஆண்டனி

இசை: பாலாஜி ஸ்ரீராம்

ஒளிப்பதிவு: எஸ் பி தர்ஷன் கிர்லோஸ்

இயக்கம்: சசி

பிஆர்ஓ : நிகில் முருகன்

கதை : கணவனை இழந்தவர் சுவாசிகா தனது இரண்டு பிள்ளைகளை கஷ்டப்பட்டு வளர்க்கிறார். தனிமையில் இருக்கும் சுவாசிகாவை ஊரில் உள்ள சில பெருசுகள் தங்கள் இச்சைக்கு அழைக்கின்றனர். அவர்களை அடித்து துரத்தும் சுவாசிகா ஒரு வழியாக தன் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குகிறார். வளர்ந்த பிள்ளைகள் தனிமையில் வாடும் தன் தாய்க்கு மறுமணம் செய்து வைக்க முடிவு செய்கின்றனர். அதற்கு சுவாசிகா மறுக்கிறார். அவரை வற்புறுத்தி திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கின்றனர். அவருக்காக மனைவி இழந்த ஒருவரையும் மாப்பிள்ளையாக பார்த்துக்கின்றனர். ஆனால் இந்த திருமணத்திற்கு உறவினர்களும் ஊர் மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து சுவாசிகாவை கொல்ல தீர்மானிக்கின்றனர். இதன் முடிவு என்ன என்பது கிளைமாக்ஸ்.

சொல்லாமலே பிச்சைக்காரன் என்று மாறுபட்ட படங்களை இயக்கிய இயக்குனர் சசி இப்படத்திலும் தனது முத்திரையை பதிக்கும் விதமாக மாறுபட்ட ஒரு கதையை கையாண்டு இருக்கிறார்

விதவை மறுமணம் தான் கதையின் கான்செப்ட் என்றாலும் அதை ரொம்பவும் மெச்சூர்டாக சொல்லி எதிர்ப்பு தெரிவிப்பவர் களையும் ஏற்றுக் கொள்ளும் விதமாக அதை அமைத்திருப்பது சசிக்கு கிடைத்த வெற்றி.

விதவை தாயாக சுவாசிகா நடித்திருக்கிறார் கவர்ச்சியாக நடிக்க பல ஹீரோயின்கள் வரிசையாக வந்தாலும் நடிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து அந்த கதாபாத்திரமாகவே வாழும் நடிகைகள் வருவதை விரல் விட்டு எண்ணி விடலாம் அந்த வரிசையில் விரல் விட்டு எண்ணக்கூடிய நடிகைகளில் ஒருவராக சுவாசிகா இந்த படத்தில் தனது அட்டகாசமான நடிப்பின் மூலம் பொருத்தமான இடத்தை பிடித்துக் கொள்கிறார்.

பல காட்சிகளில் மோனோ ஆக்டிங் என்பார்களே அதுபோல் தனிமையில் நடிக்க வேண்டிய காட்சிகளில் சுவாசிகா நடிப்பு அபாரம். தன் வீட்டில் சத்தம் போட்டு சுழலும் மின்விசிறியிடம் தனது ஆதங்கத்தைக் வெளிப் படுத்தி பேசி அதனிடம் பதில் கேட்பதெல்லாம் ஒரு சில தனிமை விரும்பிகளின் மனநிலையை வெளிப்படுத்துகிறது.

மறுமணம் செய்து கொள்ள சுவாசிகா எண்ணும்போது அதை மகன் ஏற்க மறுத்து முகத்தை காட்டும் போதெல்லாம் சுவாசிகா அதிர்ச்சியில் திணறுவதும், வளர்ந்த பிறகு தன் பிள்ளையே வந்து மறுமணம் செய்து கொள் என்று கூறும்போது சுவாசிகா அந்த முடிவை ஏற்க மறுத்து மகனை அடி வெளுப்பதும் முரண்பட்ட காட்சிகளாக இருந்தாலும் திறம்பட அமைக்கப்பட்டுள்ளது.

படம் தொடங்கியிலிருந்து இடைவேளை வரை விஜய் ஆண்டனியை காணவில்லை எப்போது வருவார், எந்த கெட்டப்பில் வரப்போகிறார் என்ற ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்துக் கொண்டே செல்ல ஒரு விவசாயியாக கண் முன் வந்து நின்று இயல்பான நடிப்பை வழங்கி அனைவர் மனதிலும் இடம் பிடிக்கிறார்.

பாத்திமா விஜய் ஆண்டனி படத்தை தயாரித்திருக்கிறார்

:பாலாஜி ஸ்ரீராம் இசை காட்சிகளை ஓவர் டேக் செய்யாமல் நெஞ்சில் பதியவிடுகிறது..

ஒளிப்பதிவாளர் எஸ் பி தர்ஷன் கிர்லோஸ் கேமராn கிராமத்து சூழலை அழகாக படம் பிடித்திருக்கிறது.

நூறு சாமி -மகன்களின் புரட்சி

 


Review by
K. Jayachandhiran

Trending cinemas now com

Related posts

விஜய் நடித்துள்ள மாஸ்டர் ஜனவரி 13ம் தேதி ரிலீஸ்

Jai Chandran

கர்ப்பமாக இருந்தபோது கேட்ட கதை யூகி : ஆனந்தி பேச்சு

Jai Chandran

விஜய் ஆண்டனி தயாரிப்பில் அஜய் திஷன் நடிக்கும் “பூக்கி”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend