Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

எங்கள் தங்கம் (பட விமர்சனம் )

படம்: எங்கள் தங்கம்

நடிப்பு: சமந்தா, திகந்த் மஞ்சாலே கௌதமி, ஆனந்த்
ஸ்ரீ லக்ஷ்மி குல்ஷன் தேவய்யா, மன்ஜூஷா
சைதன்ய கிருஷ்ணா,
ஸ்ரீமுகி

தயாரிப்பு: ராஜ் நிடிமொரு, சமந்தா, ஹிமான்க் ரெட்டி துவ்வூரு

இசை: சந்தோஷ் நாராயணன்

ஒளிப்பதிவு : ஓம் பிரகாஷ்

இயக்கம்: பி வி நந்தினி ரெட்டி

பி ஆர் ஓ : யுவராஜ்

கதை :குடும்பத்தினருக்கு தெரியாமல் சமந்தாவை திருமணம் செய்து கொள்கிறார் திகந்த் மஞ்சாலே. சில வருடங்கள் கழித்து தங்கையின் திருமணத்திற்காக சமந்தாவுடன் வீட்டிற்கு திரும்புகிறார். குடும்பத்தினர் அவரை வேண்டா வெறுப்பாக வரவேற்கின்றனர். அவர்களின் வெறுப்பை போக்கி தன்வப்படுத்த சமந்தா முடிவு செய்து அன்பை பெறுவதற்காக எல்லா வேலைகளும் செய்கிறார். இந்நிலையில் சமந்தாவை தேடி ஒரு தீவிரவாத கூட்டம் வருகிறது. அந்த கூட்டத்தின் தலைவன் சமந்தாவை கடத்தி திருமணம் செய்ய திட்டமிடுகிறான். அதன் பிறகு நடப்பது என்ன என்பதை ஆக்சன் செண்டிமெண்ட் கலந்து கிளைமாக்ஸ் சொல்கிறது.

எங்கள் தங்கம் என்ற டைட்டிலில் 70களில் எம் ஜி ஆர் நடித்த திரைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த டைட்டிலை இந்த படத்திற்கு வைத்திருக்கிறார்கள் ஆனால் டைட்டிலுக்கும் எம்ஜிஆர் நடித்த படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

சமந்தா அப்பாவி பெண்ணாக கவுதமியின் மருமகளாக வீட்டுக்குள் நுழைந்து அந்த குடும்பத்தின் சம்பிரதாயங்கள் தெரியாமல் முதலில் திக்கித் திணறி தடுமாறுவதும் சில நாட்களிலேயே கவுதமியையும் அவர் குடும்பத்தையும் தன்வப்படுத்த  சமந்தா செய்யும் தில்லுமுல்லுகள் ருசிகரமாக அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தனது தோழியை ரகசியமாக அழைத்து வந்து அவர் செய்து கொடுக்கும் கோழிக் குழம்பு முதல் அத்தனை நான்வெஜ் வகையறாக்களையும் தான் செய்ததாக கவுதமி குடும்பத்திற்கு பரிமாறி அவர்களிடம் சமந்தா நல்ல பெயர் வாங்குவதும் எப்போது அவரது குட்டு உடையப்போகிறதோ என்ற தித்திக் லேசாக இருக்கத்தான் செய்கிறது.

குடும்பத்துடன் சமந்தா கோயிலுக்கு செல்லும்போது அங்கு ரவுடிகள் பின் தொடர்வதும், அதேபோல் இரவு நேரத்தில் அரிவாளுடன் தன்னை கொல்ல வரும் ரவுடிகளையும் அதிரடியாக தாக்கி சமந்தா செய்யும் ஸ்டண்ட் அப்ளாஸ் பெறுகிறது.

வில்லன் கருணாவாக வரும் குல்ஷன் தேவய்யா ரொம்பவும் அலட்டல் இல்லாமல் ஸ்டைலாக செய்து யார் இந்த ஸ்டைல் வில்லன் என்று கேட்க வைக்கிறார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு கவுதமி இப்படத்தில் நடித்திருக்கிறார். இடைப்பட்ட காலத்தில் சற்று மெலிந்தும் உடைந்தும் காணப்பட்ட கவுதமி இப்படத்தில் மீண்டும் பளபளப்பாகி புது தோற்றத்தில் பளிச்சிடுகிறார். தமிழுக்கு இன்னொரு இளம் அம்மா அக்கா அண்ணி கதாபாத்திரத்திற்கு கவுதமி  கிடைத்திருக்கிறார்.

ஆனந்த், ஸ்ரீ லக்ஷ்மி , மன்ஜூஷா சைதன்ய கிருஷ்ணா, ஸ்ரீமுகி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

படத்தை ராஜ் நிடிமொரு, சமந்தா, ஹிமான்க் ரெட்டி துவ்வூரு தயாரித்திருக்கினறனர்

சந்தோஷ் நாராயணன் இசை பெரிதாக கை கொடுக்க வில்லை. ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் கேமரா படத்தை கண்கொள்ளா அளவுக்கு பல வண்ணங்களில் காட்சிகளை படமாக்கியிருக்கிறது

பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை வழக்கமாக இயக்கும் இயக்குனர் பி வி நந்தினி ரெட்டி இந்தப் படத்திலும் அந்த பணியை கச்சிதமாக செய்திருக்கிறார். சமந்தாவை துணிச்சலாக ஆக்சன் காட்சிகளில் பயன்படுத்தி அவருக்கு புது இமேஜ் தந்திருக்கிறார்.

எங்கள் தங்கம் – பெண்களுக்கான தன்னம்பிக்கை.

Review By
K. Jatachandhiran

trending cinemas now.com

Related posts

Shruti from the world of Dulquer’s Aakasamlo Oka Tara..

Jai Chandran

Pothanur Thabal Nilayam Trilogy Part-3 first look poster.

Jai Chandran

GV. Prakash Kumar to Unveil First Thiruvasagam Song..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend