Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பாலன் தி பாய் (பட விமர்சனம் )

படம்: பாலன் தி பாய்

நடிப்பு: பர்சானா பாலதிங்கல்,
அபிஷேஷன் கே ஆர்., ஜினான், ஜின் பால் லால், கிரிஷ் இவர்களுடன் டோவினோ தாமஸ்
தயாரிப்பு: வெங்கட் கே நாராயணா, சைலஜா ஜெசி பென்,

இசை : சுசில் ஷியாம்

ஒளிப்பதிவு : சைஜு காலித்

கதை: ஜித்து மாதவன்

இயக்கம்: சிதம்பரம்

பிஆர்ஓ : ஸ்ரீ வெங்கடேஷ்

கதை :சிறையில் இருக்கும் பர்சானா தன் குழந்தையுடன் விடுதலை ஆகி வருகிறார். ஆனால் அவருக்கு வேலை தருவதில் பலரும் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் தனது அடையாளத்தை மாற்றிக் கூறி ஆங்காங்கே வேலை செய்கிறார். யாராவது தெரிந்த முகம் வந்தால் குட்டு வெளிப்படக் கூடாது  என்பதற்காக வேறு ஊருக்கு சென்று விடுகிறார். ஒரு கட்டத்தில் தன் மகனை பிரிlய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. மகன் தாயை தேடி அலைகிறான். அப்படி அலையும் மகன், திருடன் ஒருவரிடம் தஞ்சம் அடைகிறான். இளவயது வரை அங்கேயே வளரும் சிறுவன் இறுதியில் தாயுடன் சேர்கிறானா? இல்லையா? என்பது தான் கிளைமாக்ஸ்.

மஞ்சுமல் பாய்ஸ் படத்தை இயக்கிய சிதம்பரம் பாலன் தி பாய் படத்தை இயக்கி உள்ளார். அந்தப் படத்தை இயக்கியவரா இந்த படத்தை இயக்கி இருக்கிறார் என்று எண்ணும் அளவுக்கு இரு கதைகளிலும் ஒன்றுக் கொன்று ஒரு பர்சன்ட் கூட ஒப்பீடு செய்ய முடியாத அளவுக்கு வித்தியாசம் காட்டி இருக்கிறார்.

இயக்குனர் உருவாக்கிய கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள் பர்சானா, டொமினோ தாமஸ், அபிஷேஷன் கே ஆர்., ஜினான், ஜின் பால் லால், கிரிஷ்.

வாழ்வதற்காக ஒவ்வொரு இடத்திலும் பொய் சொல்லி வேலை வாங்கும் பர்சனா தெரிந்தவர்கள் யாராவது வரும்போது சொல்லாமல் ஓட்டம் பிடிப்பது காமெடியாகவும் இருக்கிறது, வாழ்க்கை நடத்த அவர் எவ்வளவு போராட்டங்கள் நடத்த வேண்டி இருக்கிறது என்பதையும் உணர முடிகிறது.

ஒரு வழியாக பரசனாவுக்கு முதியவரை பார்த்துக் கொள்ளும் வேலை கிடைத்ததும் கொஞ்சம் நிம்மதி கிடைக்கிறது மகனையும் படிக்க வைக்கிறார். ஆனால் அதிலும் மண் விழுவது எதிர்பாராத ஷாக்

முதல் பாதி படம் ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டத்தை கலகலப்பாகவும் எதார்த்தமாகவும் கூறி ரசிகர்களை ஈர்த்த காட்சிகள் இரண்டாம் பாதியில் சற்று சொங்கித்தான் போகிறது.

டொவினோ தாமஸ் ஒரு திருடனாக வருகிறார். தன்னிடம் தஞ்சம் அடைந்த சிறுவனை வளர்த்து அவன் ஓட்டம் பிடிக்க நினைக்கும் போதெல்லாம் “உன் அம்மா வேண்டுமா வேண்டாமா? அவர் எங்கு இருக்கிறார் என்று எனக்கு தெரியும்” என்று சொல்லிச் சொல்லியே ஏமாற்றி சிறுவனை தன் கைக்குள் வைத்துக் கொள்வது சாதுரியம். உண்மையிலேயே இது டோவினோ தாமஸ் தானா என்று கேட்கும் அளவிற்கு ஒரு சராசரி மனிதன் தோற்றத்தில் அவர் தன்னை மாற்றிக் கொண்டிருப்பது நடிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதை உணர முடிகிறது.

வெங்கட் கே நாராயணா, சைலஜா ஜெசி பென்,
இணைந்து தயாரித்திருக்கின்றனர்.

சுசில் ஷியாம் இசையும்: சைஜு காலித் ஒளிப்பதிவும் ஒரு நிஜ சம்பவத்தை பார்த்துக் கொண்டிருக்கும் உணர்வை தருகிறது

ஜித்து மாதவன் கதையை
சிதம்பரம் இயக்கி இருக்கிறார். ஒரு கமர்சியல் படமாக இல்லாமல் சிறை சென்ற ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டம் எப்படி இருக்கும் என்பதை தத்ருபமாக வடித்திருக்கிறார். படம் மக்களின் வரவேற்பு பெரிதாக பெறுகிறதோ இல்லையோ தெரியாது ஆனால் பல்வேறு விருதுகளை இப்படம் தட்டி வரும் என்பதில் சந்தேகம் இல்லை

பாலன் தி பாய் – வாழ்க்கை வாழ்வதற்கு..

Review by
K. Jayachandhiran
trending cinemas now.com

Related posts

Nani, Mrunal Thakur’s Hi Nanna Teaser Unveiled,

Jai Chandran

என் இதயத்தில் தமிழ்நாட்டுக்கு தனி இடம்: நடிகை பிந்து மாதவி !

Jai Chandran

“Quotation Gang” First Look revealed

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend