Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

நித்தம் ஒரு வானம் (பட விமர்சனம்)

படம்: நித்தம் ஒரு வானம்

நடிப்பு: அசோக்செல்வன், ரிது வர்மா, ஷிவாத்மிகா, அபர்ணா பாலமுரளி, அழகம் பெருமாள், அபிராமி, ஷிவதா, காளி வெங்கட்

தயாரிப்பு: ரைஸ்ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் மற்றும் வியாகம் 18 ஸ்டுடியோஸ்

இசை: கோபிசுந்தர்

ஒளிப்பதிவு : விதுஅய்யண்ணா

இயக்கம்: ரா.கார்த்திக்

பி ஆர் ஒ: யுவராஜ்

ஐடியில் வேலை பார்க்கும் அசோக் செல்வன் எதிலும் பெர்பெக்‌ஷன் பார்ப்பவர். வீட்டில் டேபிளில் பாட்டில் வைத்த இடத்தில் தண்ணீர் படிந்திருந்தாலும் அதை துடைத்துவிடுவார். அவருக்கு வீட்டில் பெண் பார்த்து திருமணத் துக்கு ஏற்பாடு செய்கின்றனர். திருமணத்துக்கு முதல்நாள் தனது முதல் காதல்பற்றி அசோக் செல்வனிடம் அப்பெண் சொல்லி காதலனை அழைத்துக்காட்ட அத்துடன் திருமணம் நின்றுவிடு கிறது. மனதளவில் நொந்து போகும் அசோக் செல்வன் குடும்ப டாக்டரிடர் அபிராமியிடம்  நடந்ததை கூறி ஆறுதல் தேடுகி றார். அவரும் ஒரு கதை புத்தகத்தை கொடுத்து படிக்க சொல்கிறார். கதையில் வரும் கதாபாத்திரமாக தன்னையே கற்பனை செய்துக்கொள்கிறார் அசோக். கடைசிபக்கம் படிக்கப் போகும்போது அந்த பகுதி கிழிக்கப்பட்டிருப்பத்தைக் கண்டு பதற்றம் அடைகிறார். கடைசி பக்கம்பற்றி டாக்டரிடம் கேட்கும் போது மற்றொரு கதை புத்தகத்தை படித்ததால் விடை கிடைக்கும் என்கிறார். அந்த கதையில் வரும் பாத்திரமாக மீண்டும்  தன்னை எண்ணிக்கொள்கிறார் அசோக். பெண் ஒருவருக்கு தாலிகட்ட செல்லும்போது அந்த பெண் மயங்கி விழுகிறார். அதிலும் கடைசி பக்கம் இல்லாததால் டென்ஷனாகி டாக்டரிடம் என்ன ஆனது என்கிறார். அதற்கு அவர் நீ படித்த இரண்டு கதையும் உண்மை யில் நடந்தது. அவர்கள் இப்போதும் உயிரோடு இருக்கி றார்கள். சண்டிகர், இமாச்சலில் இருக்கும் அவர்களை நீயே நேரில் சந்தித்து என்ன நடந்தது என்பதை தெரிந்துக்கொள் என்கிறார். அவர் களை சந்திக்க புறப்படுகிறார் அசோக்செல்வன். திட்டமிட்டபடி அவர்களை சந்தித்தாரா? அவர்கள் வாழ்க்கை என்னவானது? அசோக் செல்வன் யாரை மணந்தார் என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல் கிறது.

காதல் கதையை இப்படியும் வித்தியாசமாக சொல்ல முடியும் என்று யோசித்த இயக்குனர் கே. கார்த்திக்கை கைகுலுக்கி பாராட்ட லாம். படம் நன்றாக இருக்கிறது என்று டாக் வந்த்துவிட்டாலே அப்படத்தை பார்க்கும்போது ஒவ்வொரு சீனும் ஆர்வத்தை தூண்டும். அப்படியொரு ஆர்வத்தை இப்படமும் தூண்டி விடுகிறது.

பாஷை தெரியாத புவனேஸ்வர் ஊரில் கதை தொடங்குகிறது. கொல்கத்தாவுக்கு எந்த பஸ்சில் செல்ல வேண்டும் என்று அசோக் செல்வன் தமிழில் கேட்க அதற்கு அங்குள்ளவர்கள் இந்தியில் பேசி அசோக்கை விரட்ட அவருக்கு ஆபத்பாண்டவன்போல் கிடைக்கிறார் ரிது வர்மா. முதலில் அசரும் கடுப்ன்படிக்க பின்னர் அசோக்கிடம் பேசி காதல் கதையை கேட்க தொடங்கியதும் காட்சிகளில் சுவரஸ்யம் புகுந்துக்கொள்கிறது.

மறுநாள் திருமணம் நடக்கவிருந்த நிலையில் தனக்கு பார்த்த பெண் காதலனை அறிமுகப் படுத்த அதை கண்டு பல்ப் வாங்கும் அசோக் அதிர்ச்சி அடைந்ததும் அரங்கு முழுவதும் சிரிப்பலையடிக்கிறது.

டாக்டராக வரும் அபிராமி அசோக்கிற்கு அட்வைஸ் கொடுத்து இரண்டு கதை புத்தகத்தை கொடுக்கும்போது அதுதான் படத்தின் முழுகதை  யாகத் தொடர்ப் போகிறது என்பதை கணிக்க முடிவில்லை.

அந்தக் கதைகளில் வரும் பாத்திர மாக அசோக் செல்வன் மாறினதும் அந்த பாத்திரமாக ஒன்றிப் போவது அருமை.

முதல் பார்வையிலேயே ஷிவாத் மிகா மீது காதல் கொண்டு அவரை பின்தொடர்வதும் பின்னர் ஷிவாத் மிகா வின் உள்ளுணர்வை புரிந்துக்கொண்டு கைபந்தாட்டம் ஆட வைத்து அழகு பார்ப்பது, திருமணம் செய்வது திடீரென்று மின்னல் தாக்கி காட்சி மறைவது  என்ன வானது என்று அசோக் செல்வனைப் போல் ரசிகர்களும் பரபரப்பில் ஆழ்ந்துவிடுகின்றனர்.

அசோக்கின் காதலியாக வரும் ஷிவாத்மிகா நடிப்பில் ஸ்கோர் செய்கி றார். கண்களில் அவர் வெளிப்படுத்தும் காதல் பாவனைகள் அழகோ அழகு.

இரண்டாவது கதையில் வரும் பாத்திரத்தில் அப்பாவித்தனமாக பேசி அசத்தும் அசோக் செல்வன் தன் காரை வழிமறித்து காரில் ஏறும் அபர்ணா பாலமுரளியிடம் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்ள சாணி பவுடர் குடித்துவிட்டதாக சொல்ல அசோக் செல்வனிடம்  சரிந்து விழுவதும் அவரை அபர்ணா மருத்துவமனை யில் சேர்த்து காப்பாற்றுவதும் கலகலப்பு.

கழுத்து நிறைய தங்க சங்கிலி அணிந்துக் கொண்டு பட்டுப் புடவை சகிதமாக மணப்பெண் கோலத்திலிருக்கும் அபர்ணா அடிக்கடி வீட்டைவிட்டு ஓடிப் போவதும் அவரை தந்தை அழகம்பெருமாள் தேடிப்பிடித்து அழைத்து வருவதும் தொடர் நகைச்சுவை.

படத்தின் இரண்டாம் பாதி எப்படியிருக்கும் என்று யூகிக்க முடியாததால் இடைவேளையில் காபி குடிக்கச் சென்றவர்களும் பாப்கார்ன் வாங்கச் சென் வர்களும் சீக்கிரமே இருக்கைக்கு திரும்பின வந்து அடுத்து என்ன என்பதை அறிந்து கொள்ள ஆர்வமாகி விடுகிறார்கள்.

அர்ஜூன், வீரா, பிரபா என மூன்று பாத்திரங்களில் நடிப்பில் வேறு பாடு காட்டியிருக்கும் அசோக் செல்வன் கதை தேர்விலும் அக்கறை காட்டியிருப்பது கைகொடுத்திருக்கிறது.

ரிதுவர்மா அசோக்கிடம் கதை கேட்டு ஆர்வமாகி தானும் நிஜபாத்திரங்களை சந்திக்க வருவதாக கூறி ஆர்வத்தை அதிகரிக்கிறார்.

ரைஸ்ஈஸ்ட் என்டர் டெயின்மென்ட் மற்றும் வியாகம் 18 ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கின்றனர்.

சுவையான ஒரு தொடர் கதை படிப்பது போன்ற அனுபவத்தை த்ந்திருக்கிறார் இயக்குனர் ரா. கார்த்திக்.

பயணக்கதை என்று ஒரு வரியில் சொல்லிவிட்டுப் போகாமல் கதாபாத்திரங்களுடன் ரசிகர் களையும் இமாச்சல் சண்டிகர், கொல்கத்தா போன்ற ஊர்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விதுஅய்யண்ணா.

கோபிசுந்தர் இசையில் பாடல்கள் மனதை ஈர்க்கிறது.

நித்தம் ஒரு வானம் – நெஞ்சில் தென்றலாய் வீசும்.

 

 

Related posts

C.V.Kumar Production Jango Audio Launch

Jai Chandran

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நடிகை ஜெயசித்ரா நிவாரண உதவி

Jai Chandran

Actress Soniaagarwal gets vaccinated

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend