Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பனாரஸ் (பட விமர்சனம்)

படம்: பனாரஸ்

நடிப்பு: ஜையீத் கான், சோனல் மோன்ட்டரியோ, சுஜய் சாஸ்த்ரி, அஜ்யூத்குமார், பர்கத் அலி

தயாரிப்பு: என் கே புரடக்‌ஷன் திலக்ராஜ் பல்லால், முஸாம்மில் அஹமத் கான்

இசை: பி.அஜ்னீஸ் லோக்நாத்

ஒளிப்பதிவு: அத்வைதா குருமூர்த்தி

இயக்கம்: ஜெயதீரா

ரிலீஸ்: சக்திவேலனின் சக்தி பிலிம் பேக்டரி

பி ஆர் ஓ: யுவராஜ்

பணக்கார வீட்டு பிள்ளை சித்தார்த் (ஜையீத்கான்) திடீரென்று தன்யா (சோனல் மோன்ட்ட ரியோ)முன் வந்து,  தான் எதிர்காலத்திலிருந்து வந்திருப்பதாகவும் எதிர்காலத்தில் நீதான் என் மனைவி நமக்கு ஒரு மகள் இருக்கிறாள். இதுபற்றி வெளியில் சொல்ல வேண்டாம்”  என்று சொல்லி ஆச்சர்யப்படுத்து
கிறான். அதில் மயங்கும் தன்யா தன் அறையில் தங்க இடம் தருகி றாள். அவளுடன் ஒரே படுக்கை யில் நெருக்கமாக இருப்பதுபோல்l படம்பிடித்து நண்பர்களுக்கு அனுப்புகிறான். பின்னர்தான் சித்தார்த் சொன்னதெல்லாம் பொய் என தெரிகிறது. இந்நிலையில் நெட்டில் சித்- தன்யா படம் வைரலாக தான்யா காணாமல் செல்கிறாள். இதை யறிந்து மனம் வருந்தும் சித் அவளை கண்டுபிடித்து மன்னிப்பு கேட்க எண்ணுகிறான். பனாரஸில் தன்யா இருக்கும் விவரம் அறிந்து அங்கு செல்கிறான் அதன்பிறகு நடப்பது என்ன என்பதற்கு கிளை மாக்ஸ் பதில் சொல்கிறது.

காதல் டைம்டிராவல் ஆன்மீகம் என வித்தியாசமான கலவையில் இப்படத்தை ஆன்மீக பூமி காசி, பனாரசில் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் ஜெயதீரா.

எதிரகாலத்திலிருந்து வந்திருப்ப தாக ஹீரோ ஜையீத்கான் சொல்லும் படத்தின் தொடக்கமே வித்தியாசம்.. அட.. பரவாயில் லையே. அப்புறம்.. என கண்ணையும், காதையும் தீட்ட வைக்கிறது.

ஜையீத்கான் துள்ளலான நடிப்பும் ஆக்‌ஷன் காட்சியும் இளமை துடிப்பு. சோனலிடம் பொய் சொல்லி எடுத்த போட்டோவால் அவர் ஊரைவிட்டே சென்று விட்டார் என்பதை அறிந்து மனம் வருந்தும் ஜையீத் அவரை தேடி பனாரஸ் புறப்பட்டதும் காதல் பயணத்துடன் ஆன்மீகப் பயணமும் கைகோர்த்துக் கொள் கிறது.

காசி, பனாரஸின் ஒவ்வொரு தெருவும்  பக்தி மயத்தில் ஊரே மணந்து மனதை பக்தியில் மூழ்கடிக்கிறது.

ஜையீத்துக்கும் சோனலுக்கும் இடையேயான காதல் எப்போது வெளிப்படும் என்ற எதிர்பார்ப்பும் சோனல் திடீரென ஐ லவ் யூ சொன்னதும் அதைக்கேட்டு ஜையீத் நடுங்குவதும் சிலிர்ப்பு.

காதல் படத்தில் திடீரென்று டைம் டிராவல் கதையை புகுத்தி களத்தை கிரைம் ஸ்டோரியாக மாற்றியதும் மாநாடு பட பாணியில்,  நடந்த காட்சிகளே மீண்டும் மீண்டும் வரும்போது பரபரக்கிறது.

சோனல் அழகுதேவதையாக வருகிறார். ஜையீத் சொல்லும் பொய்யை உண்மை என நம்பும்  அப்பாவித்தனம் அவரது வெகுளித் தனத்தை வெளிப்படுத்துகிறது. தனது தாயை நினைத்து பாடும் உருக்கமான பாடலில் காட்டும் முகபாவமும் நெகிழ வைக்கிறது.

ஆட்டோ டிரைவர் சம்புவாக வரும் சுஜய் ஷாத்ரியின் எதார்த்தமான நடிப்பு கவனத்தை ஈர்க்கிறது.

டைம்டிராவல் காட்சியில் காதலி குடும்பத்தை  ஹீரோ காப்பாற்ற முயல்வது விறுவிறுப்பக இருந்தாலும்  கடைசியில் எப்படி முடிப்பது என்று தெரியாமல் இயக்குனர் தடுமாறியிருப்பதால் திடீர்  திருப்பம் இல்லாமல் கிளைமாக்ஸை முடித்திருக்கிறார்.  ஆனாலும்  காதலை ஆன்மீகத் தேடலாக மாற்றியிருக்கிறார்

திலக்ராஜ் பல்லால், முஸாம்மில் அஹமத் கான் படத்தை தயாரித் திருக்கின்றனர்.

திரும்பும் இடமெல்லாம் தெய்வீக மணம் வீசும்படியாக காசி, பனாரஸ்,  கங்கை அழகை கண்குளிர படைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர.ர் அத்வைதா குருமூர்த்தி.

பி.அஜ்னீஸ் லோக்நாத் இசையும் பக்தி பரப்புகிறது.

பனாரஸ் – புது கலவையில் காதல் ஆன்மீகம் கிரைம்.

 

Related posts

சிவண்ணா – வெங்கட் கோனங்கி – பவன் வடேயார் இணையும் புதிய பட. ஷூட்டிங்

Jai Chandran

‘அன்பில் அவன்’ செப்டம்பர் 25- முதல், உலகமெங்கும் திரையில்

Jai Chandran

The teaser of GV Prakash Kumar’s Bachelor massive response.

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend