படம்: நேசிப்பாயா
நடிப்பு:ஆகாஷ் முரளி, அதிதி சங்கர் சரத்குமார், பிரபு, குஷ்பு, ராஜா, ஷில் பண்டத் கல்கி கோய்ச்சலின், ஜார்ஜ் கோரா
தயாரிப்பு: சேவியர் பிரிட்டோ
இசை: யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு: கேமரூன் எரிக் ப்ரிசன்
இயக்கம்: விஷ்ணு வரதன்
பி ஆர் ஓ: சுரேஷ் சந்திரா அப்துல்.நாசர்.
கல்லூரியில் தியாவை ( அதிதி) கண்டதும் அர்ஜுன் (ஆகாஷ் முரளி) காதல் கொள்கிறான் .திடீரென்று இவர்களுக்குள் பிரேக் அப் ஏற்பட்டு பிரிய, தியா போர்ச்சுகல் நாட்டில் வேலைக்கு செல்கிறாள். அங்கு கொலை வழக்கில் தியா கைது செய்யப்படுவதை டி வியில் பார்த்த. அர்ஜுன் எக்ஸ் காதலியை காப்பாற்ற போர்ச்சுக்கல் செல்கிறான். காதலியை போர்ச்சுக்கல் சிறையிலிருந்து காப்பாற்கிறானா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.
ஏற்கனவே அதர்வா ஹீரோவாக வலம் வரும் நிலையில் இதயம் முரளி வீட்டிலிருந்து 2வது ஹீரோவாக தமிழ் திரைக்கு வந்திருக்கிறார் ஆகாஷ் முரளி.
முதல் படம் என்றாலும் கேமரா பயம் இல்லாமல் நடித்திருக்கிறார் ஆகாஷ். அதற்கு காரணம் இயக்குனர் விஷ்ணுவர்தன். . நீ நடிக்கறதுநான் நடிப்பு நடி என்று தைரியம் கொடுத்திருப்பார் போலிருக்கிறது இஷ்டத்துக்கு விளையாடி இருக்கிறார் ஆகாஷ்.
நடிப்பில் காட்டிய விறுவிறுப்பை தனது தோற்றத்தில் காட்ட மறந்து விட்டாரோ என்று தோன்றுகிறது ரொமான்ஸ் காட்சிகளில் கூட அதிதியை பார்த்து முறைத்துக் கொண்டுதான் காதல் சொல்கிறார்.. ஆனால் அப்பாவிபோல் நடிக்க வேண்டிய கட்டாயத்தை இயக்குனர் உருவாக்கி தந்திருக்கிறார். இருதலைக்கொல்லி எறும்பு என்ன செய்யும் வந்தவரை லாபம் என்று நடித்துக் கொடுத்திருக்கிறார் ஆகாஷ்.
50 பேர் வந்தால் கூட ஆகாஷ் இருக்கும் தோற்றத்திற்கு அடித்தால் ரசிகர்கள் நம்புவார்கள் என்றாலும் நான்கைந்து பேர்களை அடித்து சாய்பதற்கு சமமாக மோதி அடி வாங்குவதெல்லாம் ஸ்டண்ட் காட்சியை நிஜகாட்சியாக மாற்றி இருக்கிறது. இனி போக போக சினிமா ஹீரோவாகி ஸ்டண்ட் காட்சிகளில் 50 பேர்களை அந்தரத்தில் பறக்க விடாமல் இருந்தால் சரி..
அதிதியை காதல் பொம்மையாக பயன்படுத்தாமல் அவருக்கென்று ஒரு முக்கியத்துவம் கொடுத்து போர்ச்சுகல் சிறைவாசியாக்கி சென்டிமெண்ட் பொழிய நடிக்க செய்திருக்கிறார் இயக்குனர்.
இவர்களுடன் சரத்குமார், பிரபு, குஷ்பூ, ராஜா என பலர் நடித்திருக்கிறார்கள். எல்லோருக்குமே ஒரு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.
விஜய் நடித்த மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ இப்படத்தை அதிக பொருட்செளவில் தயாரித்திருக்கிறார்.
யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் கேட்க தூண்டுகிறது.
ஒளிப்பதிவாளர் கேமரூன் எரிக் ப்ரிசன் போர்ச்சுகல் நாட்டை அழகாக படம் பிடித்திருப்பத்துடன் கார் தூரத்தல் காட்சியை ஹாலிவுட் படத்துக்கு நிகராக படமாக்கி இருக்கிறார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் படம் இயககும் விஷ்ணுவர்தன் கொஞ்சம் காதல்,
கொஞ்சம் ஆக்சன்
கொஞ்சம் த்ரில்
கொஞ்சம் சஸ்பென்ஸ்
என்று எல்லா அம்சங்களையும் கலந்து இயக்கி இருக்கிறார். காட்சிகளில் ஆங்காங்கே சில குறைகள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக ரசிக்க முடிகிறது.
நேசிப்பாயா – பொழுது போகும்..
I