தமிழ்க முதலவராக மு.க. ஸ்டாலின் பொறுபேற்ற பிறகு நேற்றுமுந்தினம் டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மோடியை சந்தித்து பேசியதுடன் அவரிடம் தமிழகத்துக்கு தேவையான கொரோனா தடுப்பு ஊசி வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி பங்கினை அளிக்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், புதிய கல்ல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.
இதையடுத்து நேற்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார் மு.க.ஸ்டாலின் அப்போது பொதுவான அரசியல் விவகாரங்கள் பற்றி பேசினர்கள்.
டெல்லியில் தங்கியிருந்தபோது மு.க.ஸ்டாலினை இடதுசாரிக்கட்சித் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா சந்தித்தனர், பிறகு டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை திரும்பினார்.