படம்: காதலிக்க நேரமில்லை
நடிப்பு: ரவி மோகன் ( ஜெயம் ரவி), நித்யா மேனன், வினய், டி.ஜே பானு, யோகி பாபு, ஜான் கொக்கின்,
தயாரிப்பு ரெட் ஜெயன்ட் மூவிஸ்
இணை தயாரிப்பு: எம்.செண்பகமூர்த்தி,, ஆர். அர்ஜுன் துரை
இசை: ஏ ஆர் ரகுமான்
ஒளிப்பதிவு: கேவ்மிக் a
இயக்கம்: கிருத்திகா உதயநிதி
பி ஆர் ஓ: சதீஷ் (AIM), சிவா
நித்யா மேனன் செயற்கை முறையில் கருத்தரித்து குழந்தை பெறுகிறார். இதற்கிடையில் ரவி மோகன் நிச்சயதார்த்தம் தடைபட்டு தனி ஆளாக நிற்கிறார். செயற்கை முறையில் குழந்தை பெற்ற நித்யா மேனனிடம் அவரது மகன் தனது தந்தை யார் என்று கேட்க பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார். இந்த நிலையில் ஜெயம் ரவி, நித்யா மேனன் சந்திப்பு நடக்கிறது. இவர்களுக்குள் இனம் புரியாத ஒரு பந்தம் ஏற்பட்டாலும் அது திருமணத்தில் முடியுமா அல்லது காதலாக மாறுமா என்பதெல்லாம் கேள்விக்குறியாகவே கடைசி வரை செல்கிறது. இதற்கு முடிவு தான் என்ன என்பதற்கு மாறுபட்ட கிளைமாக்சுடன் பதில் சொல்கிறது காதலிக்க நேரமில்லை.
இதுபோன்ற சிக்கலான கதைகளை கையாள்வது மிகவும் சிரமம். முன்பெல்லாம் இது போன்ற சிக்கலான, புதுமையான விஷயங்களை கையாள தெரிந்த ஒரு திறமையான இயக்குனராக இருந்தார் இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர். அதன்பிறகு தற்போது அந்த தைரியம் இயக்குனர் கிருத்திகா உதயநிதிக்கு வந்திருக்கிறது என்று தன் சொல்ல வேண்டும் இல்லாவிட்டால் வழக்கமான ஒரு காதல் அல்லது ஆக்சன் கதையை இயக்கிவிட்டு போயிருக்கலாம். விவாதம் வந்தாலும் சரி, தர்க்கம் வந்தாலும் சரி, விமர்சனங்கள் வந்தாலும் சரி என்றுதான் இந்த கதையை இயக்கி இருக்கிறார். தற்போதைய சமுதாய சீர்கேட்டு நிலையை ரொம்பவும் அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டி இரக்கிறார் .
நித்யா மேனன் ஒரு புதுமைப் பெண்ணாக வருகிறார். குழந்தை பெற்றுக் கொள்ள ஆண் தேவையில்லை என்று தவறு செய்த தன் காதலனை தூக்கி எறிந்து விட்டு துணிச்சலாக செயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொண்டு சிங்கிள் பேரண்டாக எந்தவித மன உளைச்சலும் இல்லாமல் வாழ்ந்து காட்டியிருப்பதன் மூலம் சமீபத்தில் அவர் பெற்ற தேசிய விருதுக்கு தகுதியானவர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்.
வேலை நிமித்தமாக பெங்களூர் செல்லும் நித்யா மேனன் அங்கு ரவி மோகனை சந்தித்து அவரது அழைப்பை ஏற்று துணிச்சலாக அவரது வீட்டுக்கு சொல்வதெல்லாம் இக்கால நாகரிகப் பெண்களின் எதார்த்த நிலையை காட்டுகிறது ஆனால் இது போன்ற சமயங்களில் விபரீதங்களும் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை வசனத்தில் இயக்குனர் சுட்டிக்காட்டி இருக்கலாம்.
ரவி மோகனுக்கும் ஒரு பிரேக் அப் ஏற்படுகிறது, நித்யா மேனனுக்கும் பிரேக் அப் ஏற்படுகிறது அதற்கு என்ன காரணம் என்பதெல்லாம் கொஞ்சம் ரகசியமாகவே இங்கு விடுவது நல்லது ..
யோகி பாபு வழக்கம்போல் தன் பங்குக்கு தட்டாலடியாக பேசி சிரிக்க வைக்கிறார். வினய் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அவரை வைத்து கிளைமாக்சில இன்னொரு விவாதத்தை தொடங்கி வைத்திருக்கிறார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி.
படத்தில் இன்னும் நிறைய கதாபாத்திரங்கள் காட்சிகளுக்கு உதவியாக வந்து செல்கிறது. எதுவும் வீணில்லை.
ரெட் ஜெயன்ட்மூவிஸ் படத்தை தயாரித்திருக்கிறது.
இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அதிரடி காட்டி இருக்கிறார். சமீப காலத்தில் ரகுமான் இசையில் இப்படி ஒரு இசையை கேட்டதில்லை.. 90ஸ் காலகட்ட இசையை இப்படத்தில் ரிப்பீட் மோட் செய்திருக்கிறார். இசை அதிரடியாக இருந்தாலும் பாடல் வரிகளை எந்த விதத்திலும் சிதைக்காமல் காதுக்குள் ரீங்காரமிட வைப்பதெல்லாம் சமீப காலங்களில் நடக்காத ஒன்று.
கேமரா கைவண்ணம் அருமையோ அருமை.
காதலிக்க நேரமில்லை -கல்யாணத்துக்கு நேரமில்லை..