Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டெஸ்ட்: குமுதாவாக மாறிய நயன்தாரா

நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் ‘டெஸ்ட்’ படத்தில் நடிகை நயன்தாராவின் கதாபாத்திரம் குமுதாவாக அறிமுகம்:  தான் விரும்பும் வாழ்க்கையை அடைய குமுதா சோதனைகளை எதிர்கொள்ள வேண்டும்!

சில கனவுகள் எளிமையானது. ஆனால், அந்த எளிய கனவுகள் மிகப்பெரும் அர்த்தம் கொண்டது.

YNOT ஸ்டுடியோஸ் வழங்கும் ‘டெஸ்ட்’ திரைப்படத்தில் நடிகை நயன்தாரா குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குமுதா ஏங்குவது எல்லாம் அன்பு, அமைதியான வீடு, அன்பான கணவர், அம்மா என்றழைக்க ஒரு குழந்தை இதெல்லாம்தான். ஆனால், இந்த கனவுகளுக்கும் சோதனை வருகிறது. இதனை அன்பு மற்றும் வலிமை மூலம் குமுதா எதிர்கொள்கிறாள். நம்பிக்கைக்கும் மனவேதனைக்கும் இடையில் சிக்கி தான் விரும்பிய வாழ்க்கைக்காக போராடுகிறாள். கனவு காணத் துணிந்து அதை விட்டுக்கொடுக்க மறுக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவளுடைய கதை ஒரு சான்றாகும்.

தனது கதாபாத்திரம் பற்றி நயன்தாரா பகிர்ந்து கொண்டதாவது, “குமுதாவின் கனவு ஒரு வீடு, ஒரு குடும்பம் மற்றும் நீடித்த காதல் என்ற எளியதுதான். ஆனால், வாழ்க்கை அவள் எதிர்பார்க்காத விதத்தில் அவளை சோதிக்கிறது. தனது கனவிற்காக போராட அவளைத் தள்ளுகிறது. குமுதாவின் பயணத்தைத் திரையில் கொண்டு வந்திருப்பது எனக்கு எமோஷனலான விஷயம். ரசிகர்களுக்கும் அதைப் பார்க்கும்போது நெகிழ்ச்சியானதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ’டெஸ்ட்’ என்பது காதல், மீண்டு வருவது மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையின் கதை. நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ‘டெஸ்ட்’ படத்தை ரசிகர்கள் பார்த்துவிட்டு என்ன சொல்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்” என்றார்.

குமுதாவின் கனவுகள் நிஜமாகுமா அல்லது எட்டாத விஷயமாகவே இருக்குமா என்பதைத் தெரிந்து கொள்ள நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஏப்ரல் 4  பாருங்கள்!

நடிகர்கள்: ஆர். மாதவன், மீரா ஜாஸ்மின், நயன்தாரா, சித்தார்த்

தொழில்நுட்பக் குழு:

எழுத்து, இயக்கம்: எஸ். சஷிகாந்த்,
தயாரிப்பாளர்: சக்ரவர்த்தி ராமச்சந்திரா & எஸ். சஷிகாந்த் (YNOT ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன்)

நெட்ஃபிலிக்ஸ் பற்றி:

நெட்ஃபிலிக்ஸ் உலகின் முன்னணி பொழுதுபோக்கு சேவைகளில் ஒன்றாகும். 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் 300 மில்லியனுக்கும் அதிகமான கட்டண சந்தாதாரர்களைக் கொண்டு பல்வேறு ஜானர்கள் மற்றும் மொழிகளில் தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு போன்றவற்றைக் கொடுத்து வருகிறது. சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம், இடைநிறுத்தலாம் மற்றும் மீண்டும் பார்க்கலாம். மேலும் எந்த நேரத்திலும் தங்கள் திட்டங்களை மாற்றலாம்.

Related posts

நடிகர் கவுதம்- மஞ்சிமா காதல் திருமணம்

Jai Chandran

வ.கௌதமன் இயக்கி நடிக்கும் “மாவீரா”

Jai Chandran

1Million Likes For PushpaRaj Intro

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend