Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சன் டிவியில் வெற்றி உலா வரும் மல்லி மெகா தொடர்

உங்கள் சன் டிவியில் வெற்றிகர மாக ஒளிபரப்பாகிக் கொண்டி ருக்கும் புதிய மெகா தொடர் மல்லி.

ஒரு குழந்தைக்கும்
தந்தைக்கும் உள்ள  பாசப் போராட்டத்தில் கதாநாயகி எப்படி வந்து இணைகிறார் என்பதே  கதை.

மல்லி பெருமாள்புரம் கிராமத்தில் டீச்சராக பணிபுரிகிறாள்.  அந்த பள்ளியில் நடக்கும் அநீதிகளை தட்டி கேட்டு அதன்மூலம் பிரச்சனைகளில் சிக்கி  சென்னைக்கு வரும் சூழலுக்கு தள்ளப்படுகிறாள். . சென்னையில் தாயில்லாமல் தந்தையின் அரவணைப்பில் வளரும் குழந்தை வெண்பா தன் தந்தையிடம் தனக்கு அம்மா வேண்டும் என கேட்டு போராடுகிறாள்.  இரண்டாவது திருமணத்தில் உடன்பாடு இல்லாத விஜய் குழந்தையை சமாளிக்க என்ன செய்கிறான் அந்த குழந்தைக்கு தாயாக மல்லி எப்படி வந்து சேர்கிறாள் என்பதை விறுவிறுப்பான சம்பவங்கள் திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக சொல்கிறது மல்லி.

மிகுந்த பொருட்செலவில் இத்தொடரை சரிகமா நிறுவனம் சார்பில் பி ஆர் விஜயலட்சுமி தயாரிக்கிறார் .

விஜய், நிகிதா, பேபி பேபி ராஹிலா, மாஸ்டர் நிதீஷ், பூர்ணிமா பாக்யராஜ், மதன்பாப், தேவ் ஆனந்த், சாய்ராம், வெங்கட், கிருத்திகா, நளினி, பாரதிமோகன், ஐசக் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கி றார்கள்.

திரைக்கதை மாரிமுத்து எழுதியி ருக்கிறார்.  மருது சங்கர் வசனம் எழுதுகிறார்.  அகிலன் ஒளிப்பதிவு செய்ய, தரண் இசையமைக்கிறார். மணிபாரதி இத்தொடரை இயக்குகிறார்

படைப்பாக்கம் நீடா கே சண்முகம். படைப்பாக்க தலைமை பிரண்ட்ஸ் இம்மானுவேல் ஏற்றிருக்கிறார்.

 

 

 

.

Related posts

ரூ 6,100 கோடி தொழில் ஒப்பந்தங்களுடன் துபாயிலிருந்து திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

Jai Chandran

குலு குலு ( பட விமர்சனம்)

Jai Chandran

மோகன்லாலின் விருஷபா படப்பிடிப்பு நிறைவு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend