சூர்யா நடித்த “ஸ்ரீ” படத்தின் இசையமைப்பாளர் டி.எஸ்.முரளி தரன் நேற்று (18.7.21) காலமானார். வசந்தசேனா வசந்தசேனா என்ற பாடல் மிகவும் பிரபலம்.
கோத்தம் என்கிற ஹிந்தி படம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், மனோஜ் பாரதிராஜா தயாரிப்பில் விக்ரம் – மீனா பாடிய ஒரு தனி ஆல்பத்துக்கும் இசையமைத்துள்ளார்.
இரண்டே பேர் நடித்த “வித்தையடி நானுனக்கு” என்ற படத்தை இயக்கி அதில் கதாநாயகனாகவும் நடித்துள்ள அவர், ராமநாதன் கே.பி என்ற பெயரில் பல படங்களில் பணிபுரிந்துள்ளார்.
முரளிதரன் இறுதிசடங்கு இன்று நடந்தது
