Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் வெங்கட் மரணம் :திரையுலகினர் இரங்கல்

திரைப்பட மற்றும் பல்வேறு டிவி தொடர்களில் நடித்தவர் வெங்கட். இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனில்லாமல் இன்று மரணம் அடைந்தார்.  வருக்கு வயது 60.

வெங்கட் டி.வி சீரியல்கள்  பிரியமானவளே,  புதுக்கவிதை, திருமகள், கனா  காணும் காலங்கள், திரைப்படங்கள் சிங்கம் 3, கொரில்லா,  வெலன்னு வந்துட்ட வெள்ளைக்காரன்,, ப்ர்ண்ட்ஷிப், நரகாசூரன், ரம், மசாலா படம், கடுகு,, தேசிங்கு ராஜா, சீதக்காதி, ஒரு பக்க கதை, ஜெய்சிம்ஹா (தெலுங்கு), கஸபா (மலையாளம்),  ஆகியவற்றில் நடித்திருக்கிறார்.

வெங்கட் மறைவு குறித்து அவரது நீண்ட கால நண்பரும், தயாரிப்பாளருமான டி சிவா வெளியிட்ட இரங்கல் செய்தியில்,’
‘என் நண்பன், சிந்தனையாளன், எழுத்தாளன், படைப்பாளி,நடிகன் வெங்கட் சற்று முன் 12.48 மணிக்கு இறைவனடி சேர்ந்தார் என்பதை தாள முடியாத வேதனையுடன் தெரிவித்து கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் சிவா கூறும்போது,’ வெங்கட்.. வெங்கட்.. வெங்கட் என் வாழ்நாளில் நான் அதிகம் அழைத்த நண்பனின் பெயர்.36 வருடங்கள் ஆயிரமாயிரம் நினைவுகள், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெற்றியிலும் தோல்வியிலும் உடன் இருந்தவன். அறிவாளி, எழுத்தாளன், படைப்பாளி, நடிகன், விமர்சகன் என ஒரு மினி சகலகலா வல்லவன். யார் சொல்லி கேட்கா விட்டாலும் நான் சொன்னால் கேட்பான் ஆனால் தடுப்பூசி போட்டுக்கொள்ளச்சொல்லி நான் சொல்லியும் ஊர் உறவு சொல்லியும் கேட்கவில்லை.அதுதான் ஆஜாணுபாகுவாக ஆரோக்யமாக இருந்த உன்னை கண்ணுக்கு தெரியாத ஒரு கிருமி எங்களிடமிருந்து பிரித்துவிட்டது மட்டுமல்ல உன் எதிர்கால படைப்புகளை திட்டங்களை கனவுகளையும் அழித்து விட்டது. சினிமா மீதுதான் எத்தனை காதல் உனக்கு ஆதாயமே இல்லாமல் இதையே சுற்றி சுற்றி வந்து சேவை செய்தாய்.நட்பே வாழ்க்கை என நண்பர்களை சுற்றியே வாழ்ந்தா ய். நட்பும் தமிழ் சினிமாவும் என்றும் உன்னை மறவாது நண்பனே.கொரோனாவுக்கு என் உடன் பிறந்த சகோதரணை பறி கொடுத்தேன் இன்று உடன்பிறவா சகோதரன் உன்னையும் பறி கொடுத்துவிட்டேன். வெங்கட்,மறக்க முடியாதடா உன்னை. மன்னித்துவிடு வெங்கட்டா இந்த கொரானாவை எதிர்த்து உன்னை காப்பாற்ற உன் மனைவியும் உறவுகளும் நண்பர்களும் நீ நேசித்த மொத்த தமிழ் சினிமாவும் உனக்காக அப்போலோ மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு போராடியது ஆனாலும் உன்னை மீட்க முடியவில்லையடா வெங்கட்.கொரோனா காலத்திலும் கடுமையாக உழைத்துவிட்டாய் வெங்கட் தெய்வத்தின் திருவடியில் நீ இளைப்பாரு உன்னை தினம் தொட்டு வணங்கி கொள்கிறேன்: என்றார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் வெளியிடுள்ள இரங்கலில்,’குடும்பத்தில் ஒவொவொருவரையாக இழந்து வருவது வருத்தம்மும் வேதனை தருகிறது. எனது நல்ல நண்பர். வாழ்க்கை அவர்களிம்ன் நினைவுகளுடன் கழிந்துக்கொண்டிருக்கிறது. எனது திரையுலக பயனத்தில் வெங்கட்டும் உடனிருந்தார். அவருக்கு எனது நன்றி. உங்களை ரொம்பவெ மிஸ் செய்கிறேன். ஆன்மா சாந்தி அடையட்டும்; என தெரிவித்திருக்கிறார்.

Related posts

Vijay – Lokeshkanagaraj Join Handstogeather again for Vijay67

Jai Chandran

மைதான் ( இந்தி பட விமர்சனம்)

Jai Chandran

AADHI STARRER “CLAP” TEASER GETS PHENOMENAL APPRECIATION WITH 1 MILLION VIEWS

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend