Trending Cinemas Now
ஆங்கில செய்திகள்

மக்கள் நீதி மய்யம் தேர்தல் பணிக்குழு அறிவிப்பினை வெளியிட்ட கமல்ஹாசன்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், மாநிலத் தேர்தல் தலைமைப் பணிக்குழு மற்றும் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பணிக்குழு அறிவிப்பினை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார். அவர் கூறியதாவது:

உயிரே உறவே தமிழே…
வணக்கம்!
நகர்ப்புற உள்ளாட்சிகளை வலுவாக்கும் முழுமையான மாநில சுயாட்சியை உறுதிப்படுத்துவது, மக்கள் நீதி மய்யத்தின் பிரதான இலட்சியங்களில் ஒன்று. இதன் அடிப்படையில் உள்ளாட்சிகளின் உரிமைகளுக்காக மய்யமானது தொடர்ந்து குரல்கொடுத்து வந்திருக்கிறது.
மய்யத்தின் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் தவறாமல் கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்று, தங்களது ஜனநாயகக் கடமையினை செவ்வனே தொடர்ந்து செய்துவந்திருக்கின்றனர். கிராமங்களுக்கு மட்டுமல்ல, நகர்ப்புறத்திலும் ஆட்சி நிர்வாகத்தில் மக்களின் பங்கேற்பை உறுதிப்படுத்த `ஏரியா சபை, வார்டு கமிட்டி’ போன்ற அமைப்புகள் விரைவில் செயல்பாட்டிற்கு வரவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம்.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது. இந்தச் சமயத்தில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்பொருட்டு, துணைத் தலைவர் திரு.A.G.மெளரியா, I.P.S., (Rtd.,) அவர்கள் தலைமையில் மாநிலத் தேர்தல் தலைமைப் பணிக் குழு மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள அனைத்து மாவட்டங்களுக்குமான நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பணிக்குழுவை அறிவிக்கிறேன்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய விருப்பமுள்ளவர்கள், கீழ்க்காணும் இணையத்தின் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.
இணைய முகவரி:

http://www.maiam.com/application-form.php

நாளை நமதே!

இவ்வாறு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Related posts

ரஞ்சித் சொன்ன கதை தூக்கி வாரிப்போட்டது: விக்ரம் பேச்சு

Jai Chandran

T-Series & Lahari Music bag music rights RRR

Jai Chandran

Mohan rocks in action avatar: Haraa glimpse raises expectations

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend