மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில், மக்கள் நீதி மய்யம் பங்கேற்பு.
‘கிராமியமே தேசியம்’ என்ற முழக்கத்துடன் கிராமங்களின் வளர்ச்சிக்காகவும், விவசாயப் பெருமக்களின் உரிமைகளுக்காகவும் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து போராடிவருகிறது. விவசாயம் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சியைப்
புறந்தள்ளிவிட்டு கிராமங்களின் வளர்ச்சி குறித்துப் பேச முடியாது.
கிராமப் பொருளாதாரத்தின் ஆணிவேராகத் திகழும் விவசாயத்திற்கு எதிராக மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றுவருகிறது. மக்கள் நீதி மய்யத் தலைவரின் வழிகாட்டுதலின்படி, எனது தலைமையில் மய்யத்தின் நிர்வாகிகள் டெல்லிக்குச் சென்று போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்து வந்தோம்.
இதன் தொடர்ச்சியாக, 10 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் அந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாத மத்திய அரசைக் கண்டித்து, நாளை 27.09.2021 அன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள தாராப்பூர் டவர் (தர்கா) அருகில் காலை 10 மணிக்கு விவசாயச் சங்கங்களுடன் மக்கள் நீதி மய்யமும் இணைந்து போராட்டம் நடத்தவுள்ளது.
இந்தப் போராட்டத்தில் நமது மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், தமிழக விவசாயப் பெருமக்கள் பலர் பங்கேற்க இருக்கிறார்கள்.
தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் நடக்கவிருக்கும் போராட்டத்திலும் நமது கட்சியின் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு, விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கக் குரல்கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மக்கள் நீதி மய்யம் விவசாய அணி மாநிலசெயலாளர டாக்டர். மயில்சாமி தெரிவித்துள்ளார்.