பரட்சி தலைவர் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாள் இன்று (ஜனவரி17 2021) கொண்டாடப்படுகிறது. ஜூனியர் எம்.ஜி.ஆர் வி. இராமச்சந்திரன் நடிக்கும் ‘கேங்ஸ்டர் 21’ படப்பிடிப்பை உலகநாயகன் கமல்ஹாசன் என்று கிளாப் அடித்துத் தொடங்கி வைத்தார்.
இந்தப் படத்தை ‘அட்டு ‘படத்தை இயக்கிய ரத்தன்லிங்கா இயக்குகிறார். A.D.R புரொடக்சன்ஸ் சார்பில் எம்.என். வீரப்பன் தயாரிக்கிறார்.
எம்ஜிஆரின் பிறந்தநாளையொட்டி எம்ஜிஆர் வாழ்ந்த இல்லம் இருக்கும் ராமாவரம் தோட்டத்திற்கு வருகைதந்த உலக நாயகன் கமல்ஹாசன், அங்குள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்’ கேங்ஸ்டர் 21′ படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார் .அதுமட்டுமல்ல இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் அவர் வெளியிட்டார்.
ஜூனியர் எம்ஜிஆர் வி. இராமச்சந்திரன் நடிக்கும் இப்படத்தை உலகநாயகன் தொடங்கி வைத்தது குறித்து பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது படக்குழு.
இப்படம் சென்னையில் நிழல் உலக தாதாவாக இருந்த ஒருவரின் கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிறது. பாலாஜி ஒளிபதிவு செய்கிறார், விக்ரம் இசை அமைக்கிறார், -ஸ்டன்னர் சாம் சண்டை பயிற்சி அளிக்கிறார், ஆனந்த் அரங்கம் அமைக்கிறார்.
இதில் இணைந்துள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஏற்கெனவே சில படங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்கள். திறமையுள்ள இளைஞர்களின் கூட்டு முயற்சியில் இப்படம் உருவாகிறது.