Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பேரறிவாளன் விடுதலை: ச ம க தலைவர் ரா.சரத்குமார் வரவேற்பு

பேரறிவாளன் விடுதலையை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின்
நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வரவேற்றுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்துவரும் பேரறி வாளனை, உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு, அரசமைப்புச் சட்டம் 142 – வது பிரிவு வழங்கியுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, விடுவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

உச்சநீதிமன்றம், 161 – வது பிரிவில் ஆளுநர் முடிவெடுப்பதற்கு காலதாமதம் செய்ததை சுட்டிக்காட்டி, மாநில அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்பதை தெரிவித்ததை கவனத்தில் கொள்ள வேண்டும். ”நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது” ஆனால் 31 ஆண்டு காலம் சிறையில் கழித்த பேரறிவாளனுக்கு தற்போது மனிதாபிமான அடிப்படையில் விடுதலை கிடைத்ததை எண்ணி தமிழக மக்கள் மகிழ்கிறார்கள்.

கருணை அடிப்படையில் தீர்வினை அளித்து, நீதியினை வழங்கியிருக்கும் உச்சநீதிமன்றத்திற்கு ஒட்டுமொத்த தமிழர்களின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ரா.சரத்குமார் கூறியுள்ளார்.

Related posts

Energetic Song From Jayam Ravi Starrer ‘Brother’

Jai Chandran

ரஜினிகாந்துக்கு தமிழக ஆளுநர் வாழ்த்து

Jai Chandran

அருண் விஜய் – ஹரி கூட்டணியின் “AV33” படப்பிடிப்பு ஆரம்பமானது.

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend