Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சி பி எஸ் சி பாடத்தில் வர்ணாஸ்ரம்: கமல்ஹாசன் எதிர்ப்பு

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம்   வெளியிட்டுள்ள. அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் 6-ம் வகுப்பு வரலாற்றுப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடத்தில், சாதி பேதத்தை அப்பட்ட மாக வெளிப்படுத்தும் வர்ணாசி ரமம் தொடர்பான பாடம் இடம் பெற்றுள்ளது பெரிதும் அதிர்ச்சி அளிக்கிறது. அப்பாடத்தில் இடம்பெற்றுள்ள படங்கள் வேதனையை அதிகரிக்கின்றன.

“வர்ணாசிரம முறை” என்ற தலைப்பிலான அந்தப் பாடத்தில் பிராமணர்கள், சத்ரியர்கள், வைஸ்யர்கள், சூத்திரர்கள் எனக் குறிப்பிடப்பட்டு, ஒவ்வொருவ ருக்குமான வேலைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதுகுறித்த கேள்விகளும் உள்ளன. பிஞ்சுக் குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக்கும் வகையில் இப்பாடம் அமைந் துள்ளது.

பேதமற்ற சமுதாயம் அவசியம் என்று கற்றுக்கொடுக்க வேண்டிய பள்ளியில், மனிதர்களிடம் சாதி பேதங்களை ஏற்படுத்தும் வகையிலான பாடத்தைக் கற்றுத் தருவது கடும் கண்டனத்துக் குரியது. உடனடியாக அந்தப் பாடத்தை அகற்ற வேண்டும் என்று சிபிஎஸ்இ மற்றும் மத்திய அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்து கிறது.

Related posts

ChiyaanVikram’s Cobra

Jai Chandran

யுத்த சத்தம் திரைப்படத்தை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ்

Jai Chandran

விஜயகாந்துக்கு திரையுலகினர் புகழாஞ்சலி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend