Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தனுஷுக்கு தேசிய விருது : அமரன் படத்துக்கு 3விருதுகள்..

72-வது தேசிய திரைப்பட விருது 18/7/2026 அன்று அறிவிக்கப்பட்டது. 24 மொழிகளில் மொத்தம் 161 திரைப்படங்கள் 16 பிரிவுகளில் போட்டியிட்டன.
திரைப்பட இயக்குநர் ஜெயராஜ், ஃபீச்சர் ஃபிலிம்ஸ் பிரிவில் 72-வது தேசிய திரைப்பட விருது வென்றவர்களின் விவரங்களை அறிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் 2024 டிசம்பர் 31 வரை வெளியான சுமார் 400 திரைப்படங்கள் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டன. இதில் சிறந்த நடிகருக்கான சிறப்பு பரிசை கேப்டன் மில்லர் படத்திற்காக தனுஷ் பெற்றார்  சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்திற்கு மூன்று விருதுகள் கிடைத்தன

தேசிய விருது பெற்றவர்கள் விவரம் வருமாறு :

சிறந்த நடிகர் :
கார்த்திக் ஆர்யன் (சந்து சாம்பியன்)
மற்றும் மம்மூட்டி (பிரமயுகம்).

சிறந்த துணை நடிகை :
சச்சனா நாமிதாஸ் (மகாராஜா)
ரூபஸ்ரீ வர்கடி (மித்யா).

சிறந்த இயக்குநர்:
ராஜ்குமார் பெரியசாமி (படம்: அமரன்).

சிறப்பு விருது
நடிகர் தனுஷ் (கேப்டன் மில்லர்).

சிறந்த பிராந்திய படங்கள்:
சிறந்த தமிழ் படம் ராயன்.

சிறந்த தெலுங்கு படம் கமிட்டி குர்ரோளு

சிறந்த மலையாள படம் ஃபெமினிச்சி பாத்திமா

சிறந்த கன்னட படம் மித்யா.

சிறந்த குழந்தைகள் படம் 35 சின்ன கதா காடு.

தொழில்நுட்பம் மற்றும் இசைப் பிரிவு:
சிறந்த பின்னணி இசை : ஜி.வி.பிரகாஷ் குமார் (படம்: அமரன்).
சிறந்த எடிட்டிங் :
ஆர். கலைவாணன் (படம்: அமரன்).

சிறப்பு அங்கீகாரம் – ஒலியமைப்பு:
சவுண்ட் இன்ஜினியர் சுரேன் (படம்: மெய்யழகன்).

தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழலை வலியுறுத்திய சிறந்த படம் :
கேப்டன் மில்லர்.

சிறந்த பொழுதுபோக்கு படம் :
கல்கி 2898 AD

சிறந்த சண்டை பயிற்சி: அனல் அரசு (மகாராஜா).

சிறந்த ஆடை வடிவமைப்பு:
தீபாலி நூர் மற்றும் ஷீத்தல் சர்மா (புஷ்பா 2: தி ரூல்).

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு:
நிதின் ஜிஹானி சௌத்ரி (கல்கி 2898 ஏடி).

சிறந்த மேக்கப் கலைஞர்:
பி. ரவி குமார் (கமிட்டி குர்ரோளு).

சிறந்த வசனகர்த்தா :
வெங்கி அட்லூரி ( லக்கி பாஸ்கர்).

சிறந்த அசல் திரைக்கதை :
தண்டரெட்டி சுகுமார் ( புஷ்பா 2: தி ரூல்).

சிறந்த ஒளிப்பதிவு:
ஷெஹ்னாத் ஜலால் ( பிரமயுகம்).

சிறந்த பின்னணி பாடகி:
வைகோம் விஜயலட்சுமி (பாடல்: ‘அங்கு வான கோணிலு’ ARM).

சிறந்த குழந்தை நட்சத்திரம் :
அதீஷ் எஸ் ஷெட்டி ( மித்யா) மற்றும்
அருண்தேவ் பொத்துலா (35-சின்ன கதா காடு)

நடிப்பு, இயக்கம், இசை, படத்தொகுப்பு, சண்டை அமைப்பு, ஒலிக்கலவை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தமிழ் திரைப்படங்கள் தேசிய அளவில் விருது பெற்றிருப்பது தமிழ் திரையுலகையும்  ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது

 

Related posts

பள்ளிக் குழந்தைகளைக் கவரும் “ஷாட் பூட் த்ரீ”

Jai Chandran

இளையராஜாவின் தபலா கலைஞர் காலமானார்

Jai Chandran

தயாரிப்பாளர் சங்கதலைவர் என்.முரளி அறிக்கை.. ’தயாரிப்பாளர் நலன் ஒன்றே இலக்கு’

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend