Trending Cinemas Now
ஆங்கில செய்திகள் சினிமா செய்திகள் செய்திகள்

கிராம சுகாதாரா மையம் தாங்குமா?கமல் எச்சரிக்கை.. காத்திடுவது நமது கடமை..

கொரோனாவில் நகரமே தடுமாறும் போது கிராம சுகாதர மையங்கள் எப்படி தாக்கு பிடிக்கும் என்று கேள்வி எழுப்பி உல்ளார் கமல்ஹாசன்:
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
கொரோனா நோயின்‌ தாக்கம்‌ சென்னை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு மாவட்டங்களில்‌ தான்‌
அதிகம்‌ இருந்தது என்ற நிலை கொஞ்சம்‌ கொஞ்சமாக கடந்த 10 நாட் களில்‌ மாறி இருப்பது, பரவலான
ஆய்வுகள்‌ ஆரம்பித்ததும்‌ உண்மை நிலை வெளிவருவதை உணர்த்துகிறது.
நகரங்களில்‌ பரவலான ஆய்வுகள்‌ மூலம்‌ நோய்த்‌ தொற்று இருப்பதை ஆராயும்‌ அரசு, கிராமப்புறங்களின்‌
மீதும்‌ அதீத கவனம்‌ செலுத்த வேண்டும்‌. நோய்த்தொற்று கண்ட றிதல்‌, அதற்கான சிகிச்சைகள்‌, அது குறித்த விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கைகள்‌ கிராமங்களில்‌ அதிகப்படுத்த வேண்டிய அவசியம்‌ வந்திருப்பதற்கு காரணமே கிராமங்களை அரசு இத்தனை நாள்‌ கண்டு கொள்ளாமல்‌ விட்டதே காரணம்‌.
தமிழகத்தில்‌ பல கிராமங்களில்‌ ஆரம்ப சுகாதார மையங்கள்‌ முறையான கட்டமைப்பு, போதிய உபகரணங்கள்‌, மருத்துவ ஊழியர்களோ இன்றி தான்‌ செயல்படுகிறது. பல நவீன மருத்துவமனைகளைக்‌ கொண்ட பெரும்‌ நகரங்கள்‌ கொரோனாவின்‌ தாக்கத்தில்‌ தள்ளாடும்போது ஆரம்ப சுகாதார மையங்கள்‌, நோய்த்தொற்று அதிகரித்தால்‌ என்னவாகும்‌ என்பதை அரசு கவனத்தில்‌ கொள்ள வேண்டும்‌.
முறையான வசதிகள்‌ இல்லாத ஆரம்ப சுகாதார மையங்கள்‌, அது இல்லை யென்றால்‌ அருகில்‌ உள்ள நகரத்துக்கு செல்ல வேண்டும்‌ என்ற நிலையில்‌ இருக்கும்‌ கிராமங்களில்‌ இந்த கொரோனா தொற்று வருமுன்‌ தடுக்கும்‌ நடவடிக்கையை அரசு தீவிரமாக எடுக்க வேண்டும்‌. வந்த பின்‌ கட்டுப்படுத்து வது
மிகவும்‌ சவாலான விஷயம்‌ என்று உணர்ந்து செயல்பட வேண்டும்‌. கிராமங்களில்‌ இத்தொற்று பரவினால்‌
நம்‌ நாட்டிற்கு ஏற்படக்கூடிய பாதிப்பு கள்‌ பொருளாதார அளவில்‌, மருத்துவ அளவில்‌ மட்டுமல்ல அடிப்படைத் தேவைகள்‌ கூட கிட்டாத அளவிற்கு செல்லக்‌ கூடும்‌. இந்தியாவின்‌ ஆன்மா கிராமங்களில்‌ உள்ளது என பாடப் புத்தகத்தில்‌ மட்டும்‌ சொல்லாமல்‌, செயலில்‌ காண்பித்து, கிராமங்கள்‌ இத்தொற்று பரவலில்‌ சிக்காமல்‌ இருக்க விரைந்து காத்திடுவது நம்‌ கடமை.
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்திருக் கிறார்.

Related posts

Varun Tej’s Matka Releasing On November 14th..

Jai Chandran

ரூ.10 கோடி கேட்பதா? தனுஷ் மீது நயன்தாரா கடும் தாக்கு

Jai Chandran

விஜய் “கோட்” டிரெய்லர் வெளியீடு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend