கொரோனா பரவலை தடுக்க கொரோனா ஊசி போடப்பட்டு வருகிறது. நடிகர் கார்த்திக் ஏற்கனவே முதல் டோஸ் ஊசி போட்டுக்கொண்டார்.
கார்த்திக் தற்போது பிரஷாந்த் நடிக்கும் அந்தகன் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். இப்படத்தை தியாகராஜன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு தளத்தில் நடித்துக்கொண்டிருந்த கார்த்திக் அங்கேயே 2வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.