படம்: மாடன் கொடை விழா
நடிப்பு: கோகுல் கவுதம், ஷர்மிஷா, டாக்டர் சூர்ய நாராயணன், சூப்பர் குட் சுப்ரமணியம், ஶ்ரீபிரியா, பால்ராஜ், மாரியப்பன், சிவவேலன், ரஷ்மிதா
தயாரிப்பு: கேப்டன் சிவபிரகாசம் உதயசூரியன்
இசை: விபின். ஆர்.
ஒளிப்பதிவு: சின்ராஜ் ராம்
இயக்கம்: இரா. தங்கபாண்டி
பி ஆர் ஒ: விஜயமுரளி
முழுக்க திருநெல்வேலி பக்க கோயில் கொடை விழா கதையாக உருவாகி இருக்கிறது மாடன் கொடை விழா.
ஊரிலிருந்து சென்னை வந்து வேலை பார்க்கும் முருகனை (கோகுல் கவுதம்) சந்திக்க வரும் நண்பர் உன் பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை நீ நேரில் ஒரு முறை வந்து பார்த்தால்தான் அதன் ஆசை நிறைவேறும் என்று கூற அவசரமாக ஊருக்கு செல்கிறான் முருகன். ஊருக்கு சென்ற பிறகுதான் தனது தந்தை கோயில் நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கி செலவு செய்த விஷயம் தெரிகிறது. இதனால் சில ஆண்டுகளாக சுடலை மாடன் சாமிக்கு கோயில் கொடை விழா நடக்காமல் இருக்க ஊரே சோகத்தில் மூழ்கியிருக்கிறது. விவரம் அறிந்த முருகன் கோயில் நிலத்தை திரும்ப தரும்படி கடன் கொடுத்தவரிடம் கேட்க அவர் மறுக்கிறார். இது ஊர் பிரச்னையாகிறது. இறுதியில் நடப்பது என்ன என்பதற்கு சுடலை மாடன் சாமியின் ஆக்ரோஷத்துடன் பதில் சொல்கிறது கிளைமாக்ஸ்.
கோயில் கொடை என்பது ஊர் பக்கம் பிரபலம். சொந்த பந்தங்கள் ஒன்று கூடி கொண்டாடும் திருவிழா. இந்த கருவை ரொம்ப சாமர்த்தியமாக பிடித்து கையாண்டிருக்கிறார் இயக்குனர்.
ஹீரோவாக நடித்திருக்கும் கோகுல் கவுதம் ஊர் பக்கம் உலவும் இயல்பான தோற்றத்தில் லுங்கி சட்டை அணிந்து ஹீரோ என்ற எந்த பந்தாவும் காட்டாமல் இயல்பாக நடித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் இவர்தான் ஹீரோ என்பதை மறக்கடித்து முருகன் என்ற பாத்திரமாக மனதில் பதிகிறார்.
தன்னை பெண் கேட்டு வரும் மாப்பிள்ளைகளை எல்லாம் விரட்டியடிக்கும் ஷர்மிளாவை கோகுல் கண்டு கொள்ளாமலிருப் பதும் இந்த காதல் ஒன்று சேருமா? சேராதா? என்ற சஸ்பென்சுடன் நகர்வது சுவாரஸ்யம்.
வெறுமனே இங்கும் அங்கும் நடந்துக் கொண்டிருந்த கோகுல். கவுதம் கிளைமாக்சில்தான் தனது ஆக்ரோஷத்தை காட்டுகிறார். தன் மீது சுடலை மாடன் சாமி இறங்கியதும் கண்களை விரித்தபடி கைகளையும் கால்களையும் ஆவேசமாக ஆட்டியபடி ஆடுவது உணர்ச்சிவசப்படுபவர்களை சாமி ஆட வைத்துவிடும்.
நாயகி ஷர்மிளா வெட்டுக் வெடுக்கென பேசி சுட்டித்தன நடிப்பை காட்டியிருக்கிறார். அரவானியாக வரும் அந்த அசல். கூத்துக்காரப் பெண்ணை இனி அடிக்கடி திரையில் பார்க்களாம்
படத்தில் நடித்திருக்கும மற்ற நடிகர்கள் டாக்டர் சூர்ய நாராயணன், சூப்பர் குட் சுப்ரமணியம், ஶ்ரீபிரியா, பால்ராஜ், மாரியப்பன், சிவவேலன், ரஷ்மிதா ஆகியோர் ஹீரோ, ஹீரோயின் போலவே புதுமுகங்கள் என்றாலும் தேர்ந்த நடிப்பை வெளியிட்டுள் ளனர்.
கேப்டன் சிவபிரகாசம் உதயசூரியன் தயாரித்திருக்கிறார்.
விபின். ஆர். இசை காட்சிகளை மிரட்டலாக தூக்கி நிறுத்துகிறது. சாமியாட்ட இசையில் பவர் அதிகம்.
சின்ராஜ் ராம் ஒளிப்பதிவு கிராமத்து இரவையும் , பகலையும் சந்து பொந்தையும்ம் , இண்டு, இடுக்கையும், மக்கா, மனிஷாளையும் அரிதாரம் பூசாமல் காட்டியிருக்கிறது.
முதல் படம் என்றாலும் இயக்குனர் இரா. தங்கபாண்டி சொல்ல வந்த விஷயத்தை பூசி மெழுகாமல் சொல்லியிருப்பது கதையில் நிஜத்தை உறுதி செய்திருக்கிறது. திருவிழா காட்சிகளை பிரமாண்டமாக காட்டியிருந்தால் கூடுதல் பிளஸ் ஆக இருந்திருக்கும். கொலை வழக்கை தீர்வில்லாமல் விடுவது ஏனோ?
மாடன் கொடை விழா – ஊர்பக்க திருவிழா.