படம்: ராபர்
நடிப்பு: மெட்ரோ சத்யா, தீபா சங்கர், சென்ராயன், டேனி பாப்
தயாரிப்பு: இம்ப்ரஸ் பிலிம்ஸ் கவிதா எஸ். மெட்ரோ புரடக்ஷன் ஆனந்த் கிருஷ்ணன்
இசை: ஜோகன் சிவநேஷ்
ஒளிப்பதிவு: என்.எஸ்.உதயகுமார்
கதை. திரைக்கதை: ஆனந்த கிருஷ்ணன்
இயக்கம்: எஸ்.எம்.பாண்டி
வெளியீடு: சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்
பி ஆர் ஒ: திரைநீதி செல்வம்
ஊரிலிருந்து தாயை தனியாக விட்டுவிட்டு சென்னைக்கு தனியார் நிறுவனத்தில் வேலை செய்ய வரும் வாலிபன் ( சத்யா). பண ஆசை, பெண் ஆசைக்கு அடிமையாகி பெண்களிடம் செயின் பறிப்பு, கத்தி காட்டி மிரட்டி கொள்ளை சம்பவம் என சட்ட விரோத செயலில் ஈடுபடுகிறான். அப்படியொரு சம்பவத்தில் இளம் பெண் சாகிறார். ஆதாரம் இல்லாத நிலையில் அவன் தப்பிக்கிறான். ஆனால் பெண்ணின் தந்தை தன் மகளை கொன்றவனை கடத்தி கொல்ல துணிகிறார். அடுத்து எதிர்பாராத டிவிஸ்ட்கள் நிகழ்கின்றன. அது என்ன என்பதற்கு பரபரப்பான திருப்பங்களுடன் கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.
செயின் பறிப்பு கொள்ளையனாக மெட்ரோ சத்யா நடித்திருக்கிறார். அப்பாவித்தனமான முகம் ஆனால் அராத்து செய்யும் செய்கைகளால் அலம்பு செய்கிறார்.
முகத்தில் முகமூடி கட்டியதும் ரவுசு செய்ய தயாராகும் சத்யா டூவீலரில் போகும் பெண்ணின் துப்பட்டாவை இழுத்து அவரை அந்தரத்தில் பறக்கவிட்டு தரையில் மோதி சாய்த்து கொஞ்சமும். இரக்கமில்லாமல் அவரது நகைகளை திருடுவது , காதில் இருக்கும் கம்மலை அறுப்பது கொடூரம்..
படத்தில் சத்யா ஹீரோ என்பதைவிட வில்லத்தனத்தைத்தான் சீனுக்கு சீன் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார். அதேபோல் ஹீரோயின் என்று யாரும் கிடையாது. முழுக்க நெகடிவ் கதாபாத்திரங்களை மையப்படுத்தி வித்தியாசமான கதைக்களத்தை அமைத்திருக்கிறார் மெட்ரோ பட.இயக்குனர் அனந்த கிருஷ்ணன்.
ஜெயபிரகாஷ் வித்தியாசமான பாத்திரம் ஏற்றிருக்கிறார். தீபா சங்கர் எதிர்பாராத ஷாக் தருகிறார். டேனி வில்லத்தனம் வித்தியாசபட்டிருக்கிறது. டூப்ளிகேட் வில்லன் சென்றாயன் கடைசியில்.காமெடி பீஸ் ஆவது.குபீர் சிரிப்பு.
இம்ப்ரஸ் பிலிம்ஸ் கவிதா எஸ்., மெட்ரோ புரடக்ஷன் ஆனந்த் கிருஷ்ணன் கமர்சியல் ரீதியாக தயாரித்திருந்தாலும் நல்லதொரு மெசேஜை தர முயன்றிருப்பது பாராட்டுக்குறியது.
ஜோகன் சிவநேஷ் இசை சீனை தூக்கி நிறுத்துகிறது.
என்.எஸ்.உதயகுமார் கேமரா கிரைம் த்ரில்லருக்கான மூடை சரி விகிதத்தில் படமாக்கியிருக்கிறது.
ஆனந்த கிருஷ்ணன் கதை, திரைக்கதை ஏதோ ஒரு கொலையை காட்டினோம் அதை கண்டுபிடித்தோம் என்ற பார்முளா படமாக இல்லாமல் பெண்கள் விழிப்புணர்வுக்கான கதையாகவும், நகரில் 100 சதவீதம் வேலை செய்யும் சி சி டிவி கேமரா இருக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தி இருப்பது அரசின் கவனத்துக்கு செல்ல வேண்டிய அவசியத்தை உணர்த்தியிருக்கிறது.
மாறி மாறி காட்சிகள் வந்தாலும் எடிட்டரின் நேர்த்தியான எடிட்டிங் எந்த குழபமும் இல்லாமல் கதையை கச்சிதமாக ஊர் சேர்க்கிறது.
அறிமுக இயக்குனர் எஸ்.எம்.பாண்டி கைதேர்ந்த இயக்குனர் போல் காட்சிகளை இயக்கி கவனத்தை ஈர்க்கிறார்.
படத்தின் கிளைமாக்ஸ் விவாதமாக கூட மாறலாம்.
ராபர் – பார்க்க வேண்டிய படம். குறிப்பாக பெண்கள் பார்க்க வேண்டிய படம்.