Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

டான் சேண்டி இயக்கத்தில் ரெஜினா நடிக்கும், ’பிளாஷ் பேக்’

அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி பிள்ளை தயாரிப்பில் இயக்குனர் டான் சேண்டி இயக்கத்தில் ரெஜினா கசென்டிரா நடிக்கும் திரைப்படம் “ப்ளாஷ் பேக்” (Flash Back)

தமிழ் திரையுலகின் முன்னணி பைனான்சியரும், ‘வேதாளம், அரண்மனை 1 மற்றும் 2, மாயா, பாகுபலி, 1, சென்னை 28 – 2ம் பாகம், இது நம்ம ஆளு,காஞ்சனா, சிவலிங்கா (தெலுங்கு), ஹலோ நான் பேய் பேசுறேன்’I உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட படங்களை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்தவருமான ரமேஷ் பி பிள்ளை, சமீபத்தில் தனது தயாரிப்பு நிறுவனம் அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக சசி இயக்கத்தில் சித்தார்த் ஜி வி பிரகாஷ் நடித்த “சிவப்பு மஞ்சள் பச்சை படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வெற்றி பெற்றதுடன் தற்போது எழில் இயக்கத்தில் ஜீ வி பிரகீஷ் நடிக்க ஆயிரம் ஜென்மங்கள் மற்றும் திரிஷ்யம்,தம்பி புகழ் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் திரிஷா நடிப்பில் ஒரு மும்மொழிப் படமாக “ராம்” படத்தை மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகிறார்

இதனை தெடர்ந்து தற்போது மகாபலிபுரம்,கொரில்லா வெற்றிப்படத்தை தொடர்ந்து டான் சேண்டி கதை,திரைக்கதை வசனத்தில் புதிய படம் ஒன்றை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார் . ரெஜினா கசென்டிரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் இன்று துவங்கியது.. அழகிய காதல் கதையினை முற்றிலும் அழகான பின்னனியில் அனைவரும் ரசிக்கும் வகையில்…உணர்வுகளின் உயர்ப்போடு படமாக்கப்படும் இப்படம் பார்ப்பவர்கள் அனைவரையும் தாங்கள் சந்தித்த பாதித்த கடந்து வந்த உணர்வுகளை ஏற்ப்படுத்தும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது..

ரெஜினாவுடன் இளவரசு,அனுசுயா,உமா ரியாஸ்,ஆர்யன்,96 பட புகழ் சூர்யா,மெர்சல் பட்புகழ் அக்‌ஷன்த் உள்ளட்ட பலர் நடிக்கின்றனர், ஒளிப்பதிவு : S.யுவா. இசை: சாம் CS.
கலை:SS மூர்த்தி. பாடல்கள்: யுகபாரதி. எடிட்டிங்: சான் லோகேஷ். நிர்வாக தயாரிப்பு : ஷங்கர் சத்தியமூர்த்தி. மக்கள் தொடர்பு: நிகில் முருகன். தயாரிப்பு ரமேஷ். P பிள்ளை.கதை திரைக்கதை வசனம் இயக்கம் டான் சேண்டி.

Related posts

போத்தனூர் தபால் நிலையம் (பட விமர்சனம்)

Jai Chandran

பையா 8 வருட கொண்டாட்டம்: கார்த்தி நினைவுகள்

Jai Chandran

அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கேள்வி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend