தென்னிந்திய சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் சங்கத்தின் சார்பில் தலைவர் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் தவிவேகா மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் LNH Creations கே.லஷ்மி நாராயணன் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய தலைவர் கவிஞர் விவேகா, “South indian social media influencers association (SISMIA) தென்னிந்திய சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் சங்கமானது கடந்த 14-ஆம் தேதி க்ரீன் பார்க் ஹோட்டலில் பிரம்மாண்ட தொடக்க விழாவாக நடைபெற்றது. மிகப்பெரிய ஆளுமைகள் அழைப்பை ஏற்று வருகை தந்தார்கள். மாபெரும் வெற்றி விழாவாக அது அமைந்தது.
சோசியல் மீடியா Influencers என்பவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல, ஏன் என்றால் ஒரு உளியை எடுத்து தன்னை சிற்பமாக செதுக்குவது போல தன் கைவசம் இருக்கும் திறமையை மூலதனமாக கொண்டு தங்களுக்குள்ளே வெளிச்சம் பாய்ச்சு கொண்டு வெளியே வருகிறார்கள். அவர்களை தாய்மையோடு அரவணைத்து செல்ல தான் இந்த அமைப்பு துவங்கப்பட்டுள்ளது.
சோசியல் மீடியாவில் இன்று சாதாரணமானவரை உச்சத்திற்கு கொண்டு செல்ல முடியும். அது ஒரு கூர்மையான கத்தி நேர்மையாக கொண்டு செல்லம்போது பல்வேறு வெற்றிகளை நாம் சாதிக்க முடியும்.
சமூகத்தில் நல்ல மாற்றங்களை உருவாக்கும் விதமாக தான் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. எத்தனை பெரிய ஆச்சர்யங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஜல்லிக்கட்டு மாபெரும் போராட்டமாக மாறியது இந்த சோசியல் மீடியாவால் தான். நல்ல நோக்கோடு இதை கொண்டு செல்லும் விதமாக இவ்வமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.” என்று கூறினார்.
தென்னிந்திய சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் சங்கத்தின் நோக்கங்கள் (SISMIA):
1. இதுவரை அமைப்பு சாரா கலைஞர்களாக இருக்கும் Social Media Influencers-களை SISMIA எனும் உறுதியான அமைப்பின் கீழ் ஒருங்கிணைத்து அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருதல்.
2.சமூக ஊடக செயற்பாட்டாளர் களுக்கான பாதுக்காப்பை உறுதி செய்தல்.
3.Social Media Influencers-கான புதிய பணிவாய்ப்புகளை ஏற்படுத்துதல்; அவர்களுக்கான பயிற்சி முகாம்களை
அமைத்தல்.
4. மத்திய மாநில அரசுகளோடு பேசி Social Media Influencers-க்கான நலத்திட்டங்களை பெற்றுத்தருதல்
5. ஏற்கனவே காப்பீட்டு நிறுவனங்களில் உறுப்பினர்களுக்கு சங்கமே மருத்துவக் காப்பீட்டுக்கான தொகையைச் செலுத்தியுள்ளது
6. ஏபரல் 1 ஆம் தேதி முதல் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உறுப்பினர்கள் பயன் பெறுவர். இன்னும் சில காப்பீட்டுத் திட்டங்களையும் சங்கம் ஏற்பாடு செய்ய முயற்சிக்கும்.
7. தனிநபராக இருப்போர் குழுவாக இணைந்து பயன் பெற சங்கம் உறுதுணையாக நிற்கும்
8.சங்கத்தின் சட்டப் பாதுக்காப்புக் குழு உறுப்பினர்களின் நேர்மையான தேவைகளுக்குத் துணை நிற்கும்
சங்கத்தின் தொழில் நுட்பக் குழு உறுப்பினர்களுக்குத் தேவைப்படும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கும்
தலைவர்: கவிஞர் விவேகா (திரைப்பட பாடலாசிரியர்)
செயலாளர்: LNH Creations கே.லஷ்மி நாராயணன் (திரைப்பட தயாரிப்பாளர்)