Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நவம்பர் 1ம் தேதி முதல் புது படம் தொடங்க கூடாது: தயாரிப்பு சங்கம் அறிக்கை

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஏற்கனவே வெளியிட்ட அறிக்கை யில் தயாரிப்பு செலவு அதிகரித்து தயாரிப்பாளர்களுக்கு கூடுதல் பணச் சுமை ஏற்படுவதால் திரைத்துறை சார்ந்த அனைத்து சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மறுசீரமைப்பு ஏற்படுத்துவ தற்கு ஏதுவாக தயாரிப்பில் இருக்கும் படங்களின் படப்பிடிப்பு மட்டும் நடத்தப்பட வேண்டும். நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் புதிய படங்களை துவக்க வேண்டாம் என்று சொல்லி இருந்தோம்.

தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் 24 சங்கங்களை உள்ளடக்கிய பெப்சியில்
பல யூனியன்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை சுமூகமாக வந்துள்ளது.
இன்னும் சில யூனியன்களிடம் பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. அதை முழுமை யாக பேச்சுவார்த்தை நடத்திட வேண்டியுள்ளது.

இவை அனைத்தும் முழுமையாக பேசி நடைமுறைக்கு கொண்டு வர உள்ளதால் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மறு அறிவிப்பு வரும் வரை புதிய படங்களின் வேலைகளை துவக்க வேண்டாம் என்ற நிலைப்பாடு தொடர்கிறது என்பதை தயாரிப்பாளர்களர் களுக்கு தெரிய படுத்தி கொள்கிறோம்.
நமது ஒற்றுமையே தயாரிப்பு தொழிலை சிறப்புற செய்யும். ஒற்றுமையை வலிமையோடு நிலைநாட்டுவோம். ”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

ஜனநாயகன் (பட விமர்சனம் )

Jai Chandran

விமல் நடிக்கும் படவா ஆடியோ வெளியிட்ட விஜய் ஆண்டனி

Jai Chandran

நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி பொங்கல் படங்கள்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend