Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பாடலாசிரியர் பிரியன் நடிக்கும் திகில் படம் அரணம்

பிரபல பாடலாசிரியர் பிரியன் கதாநாயகனாக அறிமுகமாகும் ஹாரர், கிரைம், திரில்லர் படம் ” அரணம் ”

தமிழ்த்திரைக்கூடம் திரைப்பட நிறுவனம் தயாரித்துள்ள படம் ” அரணம் “.

மஸ்காரா போட்டு மயக் குறியே, மக்காயலா மக்கா யலா, வேலா வேலா வேலா யுதம், உசுமுலாரசே உசுமுலாரசே, செக்ஸி லேடி கிட்ட வாடி, மனசுக்குள் புது மழை விழுகிறதே போன்ற ஹிட் பாடல்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய பிரபல பாடலா சிரியர் பிரியன் இந்த படத்தின் மூலம் கதாநாயக னாக அறிமுகமாகிறார்.

கதாநாயகியாக வர்ஷா நடித்துள்ளார். ராட்டினம், எட்டுத்திக்கும் மதயானை, சத்ரு போன்ற திரைப்படங் களின் கதைநாயகன் லகுபரன் மற்றும் கீர்த்தனா ஆகியோரும் நடித்துள் ளனர்.

நித்தின்.கே.ராஜ், இ ஜே.நௌசத் ஆகிய இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

இசை சாஜன் மாதவ்.
படத்தொகுப்பு  பி. கே
பாடல்கள்  பிரியன்,  முருகானந்தம், பாலா, சஹானா. கலை  பழனிவேல். ஸ்டண்ட்  Rugger ராம்குமார்.
நடனம்  ராம்சிவா ஸ்ரீசெல்வி. மக்கள் தொடர்பு  மணவை புவன்.
தயாரிப்பு  தமிழ்த்திரைக் கூடம். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  பிரியன்.

படம் பற்றி இயக்குநர் பிரியன் கூறியதாவது: …

வாழ்க்கையின் அதிசயமே அடுத்த நிமிடம் நடக்கும் நாம் எதிர்பாரா ஆச்சர்யங் களும் அதிர்ச்சிகளும் தான். அப்படி ஒரு மனிதன் வாழ்வில் நடக்கும் சில சம்பவங்கள் அதை எதிர் கொள்கையில் அவன் காணும் பெரும் நிகழ்வு கள் என யூகிக்கவே இயலாத வகையில் கட்டமைக்கப்பட்டிருக்கும் கதை இது.

ஒரு பெரிய ஜமீன் வீட்டில் வாழ்ந்து வந்த ஜமீன் தாரின் ஊதாரி மகன் திடீரென இறந்துவிட.. அவன் பேயாக இருப்பதாக நம்பப்படும் நிலையில் அந்த ஜமீன்தாரும் அதே வீட்டில் இறந்துவிட.. அவரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட கதிர் தன் புதுமனைவியுடன் அந்த ஜமீன் வீட்டுக்குக் குடியேறு கிறான். மகிழ்ச்சியாய் அவர்கள் வாழத்துவங்கு கையில் பங்களாவை சுற்றிலும் சில அமானுஷ் யங்கள் நடக்கிறன. அவை என்ன? எதிர்பாரா மர்மங்கள் நிறைந்த அவற்றை கதிர் தன் தம்பியின் துணையோடு எப்படிக் கண்டுபிடித்துத் தன் குடும்பத்தைக் காக்கிறான் என்பதை ஹாரர், கிரைம், திரில்லர் வடிவில் சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

படத்தின் முதல்பாதி முழுக்க ஒருதிசையிலும், இரண்டாம் பாதி முழுக்க டிவிஸ்ட் மற்றும் திருப்பங் களுடனும்  இதுவரை கண்டிரா ஒரு வழக்கமு டைத்த பிரத்தி யேக திரைக்கதை அனுபவத் தை அரணம் நிச்சயமாக வழங்கும்.

திரைப்படப் பாடலாசிரி யராக இதுவரை 500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கிறேன். இப்போது ஒரு நடிகனாக, இயக்குநராக உங்கள் முன் வந்திருக்கிறேன். பாடல் களுக்கு கொடுத்த அதே அன்பையும், ஆதரவையும் இப்பொழுதும் எப்பொழுதும் தர வேண்டு கிறேன். நல்லன நடக்கும்.

இவ்வாறு பிரியன் கூறினார்

 

Related posts

50th Day Celebration Event of Sasikumar’s “Ayothi”

Jai Chandran

Vijay Deverakonda is on the Power List 2021

Jai Chandran

டி எம் ஜே ஏ உறுப்பினர்களுக்கு வெற்றிமாறன் இன்சூரன்ஸ் அட்டை வழங்கினார்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend