Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

லைகா சுபாஷ்கரன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான்

லைகா புரடக்‌ஷன்  சுபாஸ்கரன், எஸ்கே புரடக்‌ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்க,
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும், இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் “டான்” திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே, ரசிகர்களிடம் படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. அனிருத்தின் இசையில் வெளியான வண்ணமயமான மோஷன் போஸ்டர், அதைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி போன்ற சிறந்த நடிகர்கள் படக்குழுவினருடன் இணைய, இப்படம் ரசிகர்களின் ஆர்வத்தை மென்மேலும் கூட்டி வருகிறது. .இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படக்குழுவினர் தற்போது கலர்ஃபுல் ஃபர்ஸ்ட் லுக்கை ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தின் டைட்டில் அறிவிப்புடன் வெளியான மோஷன் போஸ்டர், இது ஒரு காமெடி கலக்கல் நிறைந்த, கல்லூரி சார்ந்த பொழுதுபோக்கு படம் என்ற தோற்றத்தை தந்தது. தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் அதை மீண்டும் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இப்படம் கல்லூரியின் பிண்ணனியில் எப்போதும் வழக்கமான அம்சமான, மாணவர்கள் Vs பேராசிரியர்கள் என்ற கருப்பொருளைச் சுற்றி அமைந்தது என்பதையும் வெளிப்படுத்தும்படி அமைந்துள்ளது. இத்திரைப்படம் மிகச் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன், பார்வையாளர்களுக்கு திருவிழா கொண்டாட்ட அனுபவத்தை வழங்கும், என்று தயாரிப்பாளர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘டாக்டர்’ படத்தில், திரையில் வெகு அழகான கெமிஸ்ட்ரியைப் பகிர்ந்து கொண்ட சிவகார்த்திகேயனும், பிரியங்கா மோகனும் இந்தப் படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். இவர்களுடன் நடிகர் S.J.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன், R.J.விஜய், சிவாங்கி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ராதா ரவி, சிங்கம்புலி, ஜார்ஜ், ஆதிரா மற்றும் பல நடிகர்கள் ‘டான்’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப குழுவில் அனிருத் (இசை), கே.எம்.பாஸ்கரன் (ஒளிப்பதிவு), நாகூரன் ராமச்சந்திரன் (எடிட்டர்), உதயகுமார் K (கலை), விக்கி (ஸ்டண்ட்ஸ்), சுரேன் G-S அழகியகூத்தன் (ஒலி வடிவமைப்பு-ஒலி கலவை), விக்னேஷ் சிவன்-ரோகேஷ் (பாடல்கள்), பிருந்தா -ஷோபி பால் ராஜ்-பாப்பி-சாண்டி (நடன அமைப்பு), அனு-ஹரிகேஷ்-நித்யா-ஜெஃபர்சன் (ஆடை வடிவமைப்பு), பெருமாள் செல்வம் (காஸ்ட்யூமர்), P கணபதி (மேக்கப்) ஸ்டில்ஸ் பிருதிவிராஜன் N (ஸ்டில்ஸ்), M.மஞ்சுநாதன் (தயாரிப்பு மேலாளர்), சுரேஷ் சந்திரா-ரேகா D’One (மக்கள் தொடர்பு), டுனெ ஜான் (போஸ்டர் டிசைனர்), வீர சங்கர் (தயாரிப்பு நிர்வாகி), திவாகர் J – AR கார்த்திக்-ராகுல் பரசுராம் (SK Productions), GKM தமிழ்குமரன் (Head, Lyca Productions), கலை அரசு ( இணை தயாரிப்பாளர்) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

சிபி சக்கரவர்த்தி இயக்குநராக தனது திரைப்பயணத்தை துவங்கும் “டான்” திரைப்படத்தினை Lyca Group தலைவர் சுபாஸ்கரன் Lyca Productions சார்பில், SK Productions உடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்.

Related posts

லிப்ட் (பட விமர்சனம்)

Jai Chandran

இளையராஜா ரிகர்சலில் ரஜினிகாந்த்

Jai Chandran

Balaji Sakthivel Next Directorial Announcement on August 3rd

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend