Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மே 23ம் தேதியில் கொரோனா-டாஸ்மாக் அரசியல் முக்கிய தகவல்..

மே 23ம் தேதியான இன்றைய முக்கிய செய்திகள் வருமாறு:

* நாளை மே 24ம் தேதி முதல் ஒரு வார காலத்துக்கு தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அறிவித்திருக் கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
* இ – பதிவு மூலம் தமிழத்தில் திருமணத்து செல்ல முழு ஊரடங்கில் தடை விதிக்கப் பட்டிருக்கிறது
* தமிழகத்தில் தடுப்பூசி கையிருப்பை பொறுத்து தடுப்பூசி போடப்படும் மையங்கள் குறைக்கப்படும் என சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித் திருக்கிறார்.
* ‘டாஸ்மாக்’ கடைகள் 23-ந் தேதி (இன்று) திறக்கப்படாது என்று ‘டாஸ்மாக்’ மேலாண்மை இயக்குனர் அறிவித்துள்ளார். கடந்த மே 10-ந் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக் கின்றன. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.


* இந்தியாவில் பரவி வரும் கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து வழங்குவதை உறுத்திப் படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதி உள்ளார்.

* பாஜ அரசு மத்தியில் பதவி ஏற்று 7 ஆண்டுகள் நிறை வடைகிறது. தற்போது கொரோனா 2வது அலை பாதிப்பால் நாடே கதறிக் கொண்டிருக்கும் நிலையில் பாஜவின் 7 ஆண்டு நிறைவு விழாவை கொண்டாட வேண்டாம் என்று பா ஜ தலைவர் நட்டா தொண்டர் களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
* கொரோனாவின் 2ம் அலையை சமாளிக்க மத்திய மாநில அரசுகள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் 3வது கொரோனா அலையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறீர்களா என அரசுக ளுக்கு குழந்தைகள் உரிமை குழு முன்னெச்சரிக்கை கேள்வி எழுப்பு உள்ளது.

* தேர்தலுக்கு முன் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பா ஜ கட்சியில் இணைந்த சோனாலி குஹா பா ஜ கட்சியிலிருந்து விலகி மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர விரும்புவதாக கண்ணீர் மல்க மம்தாவுக்கு கடிதம் எழுதி உள்ளார். இது பா ஜ தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

* நாடுமுழுவதும் கருப்பு பூஞ்சை நோயால் 8.800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 16.70 கோடி பேர் பாதிக்கப்பட்டிருக் கின்றனர்.
* அரசியல் நெருக்கடியால் நேபாளத்தில் நாடாளுமன்றத் தை அந்நாட்டு அதிபர் பித்யா தேவி பண்டாரி கலைத்து புதிதாக தேர்தல் நடத்த உத்தரவிட்டிருக்கிறார்.

* இந்தியாவில் புதிய வகை உருமாறிய கொரோனா கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஆக்ஸ்போர்ட், அஸ்ட்ரா செனகா மற்றும் பசர் தடுப்பூசிகள் 80 சதவீதம் செயல்திறன் உடையாக இருக்கிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Related posts

VARIED ROLES AND UPCOMING INDIAN ANTHOLOGY ‘NAVARASA’

Jai Chandran

Veeramae Vaagai Soodum On Feb 4 th

Jai Chandran

ரெண்டு பாட்டில் வோட்கா ஆல்பம் பாடல்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend