Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

சில நொடிகளில் (பட விமர்சனம்)

படம்: சில நொடிகளில்

நடிப்பு: ரிஷி ரிச்சர்ட், புன்னகை.பூவே கீதா,  யாஷிகா ஆனந்த், லைடியா தனிஷ்டன்

தயாரிப்பு: புன்னகை பூவே கீதா

இசை; மசாலா காபி, பிஜோர்ன்,, தர்ஷனா கே.டி.,  ஸ்டாகாட்டோ.மற்றும்  ரோஹித்

ஒளிப்பதிவு: அபிமன்யூ சுதானந்தன்

இயக்கம்: வினய் பரத்வாஜ்

பி ஆர் ஒ;: சுரேஷ் சந்திரா (D”One) ரேகா, நாசர்

 

ராஜு (ரிஷி.ரிச்சர்ட்) வேதா (கீதா) தம்பதிகள் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். அழகு சிகிச்சை டாக்டரான ராஜூவிடம் சிகிச்சைக் காக வருகிறார்  மாயா (யாஷிகா).  இதில் இருவரும்.நெருக்கமாக பழகுகின்றனர். ஒரு சமயம் போதை மாத்திரை எடுத்துக் கொண்ட மாயா இறக்கிறார். அவரை மரப்பெட்டியில் அடைத்துக்  கொண்டு சென்று குழி  தோண்டி புதைக்கிறார் ராஜூ. மாயாவின்  உறவுக்கார பெண் ராஜூவை மிரட்டுகிறார். கேட்கும் பணம் தராவிட்டால் மாயா விவகாரத்தை அம்பலப்படுத்து வேன் என்கிறார். இதில் பயந்த ராஜூ விவகாரத்தை மனைவி வேதாவிடம் சொல்கிறார். ஆனால் இதில் ஒரு மர்மம் இருப்பது பின்னர்தான்   தெரிய வருகிறது. இறந்ததாக கருதப்பட்ட மாயா உயிரோடு வருகிறார். அதன் பிறகு நடப்பது என்ன?. இறந்து போன மாயா உயிரோடு வருவது எப்படி? என்ற கேள்விகளுக்கு  ஷாக்கான  விடை தருகிறது கிளைமாக்ஸ்.

சர்ச்சைக்குள்ளான திரவுபதி, ருத்ரதாண்டவம் படங்களில் நடித்த ரிஷி ரிச்சர்ட் சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தில்  நடித்திருக்கிறார். ஸ்டைலான கெட்டப்பில் வரும் ரிச்சர்ட்,  யாஷிகா இறந்த பிறகு அவரது உறவுக்கார பெண்ணின் மிரட்டலுக்கு பயந்து டென்ஷனில் தவிப்பதும் , ஒரு கட்டத்தில் தனக்கு  ஏற்பட்ட  சிக்கலை  மனைவி கீதாவிடம் சொல்லிவிட்டு மன ஆறுதல் அடைவதும் என எதார்த்த நடிப்பில் மீட்டர்  மாறாமல் நின்று  கவர்கிறார்  ரிஷி.

கணவர் ரிஷி தன்னை காதலித்து ஏமாற்றி திருமணம் செய்து விட்டாரே என்று மனம் நொந்து  கோபப்படும் கீதா முறைப்பு காட்டுவதும்  இது இருவருக்கு மான குடும்ப மோதலாக மாறும் என்று எதிர்பார்க்கும்.நேரத்தில் திடீரென்று கதையில் ஏற்படும் திருப்பம்  அதிர்ச்சி தருகிறது.

புன்னகை பூவே கீதா நீண்ட நாட்களுக்கு பிறகு தென்பட்டாலும் புதுவித எனர்ஜியுடன் நடித்து அசத்துகிறார். அவரது கதாபாத் திரத்தில் இப்படியொரு டிவிஸ்ட்டை இயக்குனர் வைத்தி ருப்பார் என்பதை கிளைமாக்ஸ் நெருக்கம் வரை  கண்டுபிடிக்க முடியாதது பலமான  சஸ்பென்ஸ் முடிச்சு.

சல்சா பாடல்.ஒன்றுக்கு கீதா 360 டிகிரிக்கு சுழன்று ஆடும் ஆட்டம் மலைப்பை ஏற்படுத்துகிறது.இந்த  நடனம் ஆடுவது  கீதா தானா அல்லது ஜிம்னாஸ்டிக் வீராங்கனையா என்று ஒரு நிமிடம் ஸ்தம்பிக்க வைக்கிறார்.

ரிச்சர்ட் கீதா காட்சிகளில் அடிக்கடி  “ஏன் டயர்டா இருக்கே” என்று கீதா கேட்பதும் அதற்கு ரிச்சர்ட் கோபப் படுவதும் ரிபீட்டாக வருவது சலிப்பு தட்டுகிறது. வசனம்.கூட மாறாமல் அதே வசனத்தை கேட்கும்போது காட்சிக்கு பஞ்சம் ஏற்பட்டு விட்டதோ என்று கேட்கத் தோன்றுகிறது.

சுமார் 5 இசை அமைப்பாளர்கள் (சாலா காபி, பிஜோர்ன்,  சரோ தர்ஷனா கே.டி. ஸ்டாகாட் டோ.மற்றும்  ரோஹித்( பாடல், பின்னணி இசை என்று கலக்கி இருக்கின்றனர். அதேபோல் ஒளிப்பதிவாளர்: அபிமன்யூ சுத்தானந்தன் ஹாலிவுட் தரத் துக்கு கேமிராவை கையாண்டி ருக்கிறார் படப்பிடிப்பு முழு வதும்.லண்டனில் நடந்திருக்கிறது.

வினய் பரத்வாஜ் சஸ்பென்ஸ் த்ரில்லரை ரசனை குறையாமல் இயக்கி இருக்கிறார். சில காட்சி களில் கத்தரி போட்டால். வேகம் அதிகரிக்கும்

சில நொடிகளில் ஹாலிவுட் பாணியில்l ஒரு சஸ்பென்ஸ்  திரில்லர்.

 

 

 

 

 

 

 

 

 

 

Related posts

முருகதாஸ் உதவியாளர் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் படம்

Jai Chandran

ஃபேன்டஸி திரில்லர் திரைப்படம் “நாக் நாக்” பட ஃ பர்ஸ்ட் லுக்

Jai Chandran

Samyuktha as Nyshadha first look poster unveiled from Devil

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend